ரெயில்வே அமைச்சகம்
புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் புதுமை கண்டுபிடிப்பாளர்களுக்கான ரயில்டெக் தளத்தை மத்திய அமைச்சர் திரு அஸ்வின் வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
26 FEB 2026 3:54PM by PIB Chennai
தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகம், புதுமை சார்ந்த மாற்றத்தை நோக்கிய ஒரு பெரிய முயற்சியாக, மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வேயின் முதன்மை திட்டங்களில் ஒன்றான "52 வாரங்களில் 52 சீர்திருத்தங்கள்" என்ற முயற்சியின் கீழ், ரயில்வே தொழில்நுட்பக் கொள்கையையும், ரயில்வே உரிமைகோரல் தீர்ப்பாயத்தின் (RCT) முழுமையான டிஜிட்டல் மயமாக்கலையும் இன்று அறிவிவித்தார்.
புதுமைக்கான ஒரு பிரத்யேக ரயில்வே தொழில்நுட்ப தளமாக ரயில்டெக் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு புதுமை கண்டுபிடிப்பாளரும் இதில் விரிவான திட்டங்களை சமர்ப்பிக்கலாம்.
இந்த நிகழ்ச்சியில் தீர்ப்பாயம் தொடர்பான சீர்திருத்தம் குறித்து பேசிய திரு அஸ்வினி வைஷ்ணவ், நாட்டில் எங்கிருந்தும் உரிமைகோரல் தாக்கல் செய்வதை எளிமையாகவும், டிஜிட்டல் ரீதியாகவும், மாற்றுவதே இந்த சீர்திருத்தத்தின் நோக்கமாகும் என்று கூறினார். புதிய அமைப்பின் கீழ், பாதிக்கப்பட்ட பயணிகள் பயணம் செய்யும்போதோ அல்லது சேருமிடத்தை அடைந்தபோதோ கூட, அவர்கள் இருக்கும் இடத்தைப் பொருட்படுத்தாமல் மின்னணு முறையில் உரிமைகோரல்களை தாக்கல் செய்ய முடியும் என்று அவர் தெரிவித்தார். அடுத்த ஓராண்டுக்குள், ரயில்வே உரிமைகோரல் தீர்ப்பாயத்தின் அனைத்து அமர்வுகளும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று திரு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233083®=3&lang=1
***
TV/PLM/RK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2233204)
வருகையாளர் எண்ணிக்கை : 11