நிதி அமைச்சகம்
டிஜிட்டல் அடிப்படையிலான சுங்கவரி சீர்திருத்தங்கள், எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான இணக்க நடைமுறைகளை எளிதாக்குகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
26 FEB 2026 12:54PM by PIB Chennai
ஜெனிவாவில் உள்ள உலக வர்த்தக அமைப்பில் சிறப்பு வர்த்தக நடைமுறைகள் குறித்த விவாதத்திற்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் உலக வர்த்தக அமைப்பிற்கான இந்தியாவின் நிரந்தர தூதரகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. 24-ம் தேதி நடைபெற்ற சிறப்பு வர்த்தக ஆலோசனைக் கூட்டத்திற்கு இடையே இந்த அமர்வு நடைபெற்றது. இதில் 40 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
உலகளவில் உள்ள மிகச்சிறந்த வர்த்தக நடைமுறைகளுடன் ஒருங்கிணைக்கும் வகையில் மத்திய அரசு சுங்க நடைமுறைகளில் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாக மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் சிறப்பு செயலர் மற்றும் உறுப்பினரான திரு சுர்ஜித் புஜாபல் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நாடுகளுடனான வர்த்தக நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்தும், வர்தத்கத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையிலும் இத்தகைய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
டிஜிட்டல் அடிப்படையிலான சுங்கவரி சீர்திருத்தங்கள், எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான இணக்க நடைமுறைகளை எளிதாக்குவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233001®=3&lang=1
***
AD/SV/RJ/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2233085)
வருகையாளர் எண்ணிக்கை : 12