கனரகத் தொழில்கள் அமைச்சகம்
கட்டுமான உபகரண சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கான உத்திசார் நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது - மத்திய அமைச்சர் திரு எச்.டி. குமாரசாமி
இடுகை இடப்பட்ட நாள்:
25 FEB 2026 12:27PM by PIB Chennai
இந்தியாவின் உள்கட்டமைப்பு, உற்பத்தி ஆகியவற்றில் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதில் கட்டுமான உபகரணங்களுக்கான வலுவான கடன் நிதி கட்டமைப்பு முக்கிய பங்கு வகிப்பதாக மத்திய கனரக தொழில்கள், எஃகு துறை அமைச்சர் திரு எச்.டி. குமாரசாமி கூறியுள்ளார். இன்று (25.02.2026) புதுதில்லியில் நடைபெற்ற 6-வது வருடாந்திர கட்டுமான உபகரண கடன் நிதி மாநாட்டில் அவர் உரையாற்றினார்.
இந்தியா இப்போது உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உள்ளது எனவும் வரும் ஆண்டுகளில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் செல்வதாகவும் அவர் கூறினார். இந்த வளர்ச்சிப் பாதையானது, உள்கட்டமைப்பு விரிவாக்கம், உற்பத்தி, நிலையான மூலதன முதலீடு ஆகியவற்றால் ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசு, உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதை அவர் எடுத்துரைத்தார்.
இலக்கு சார்ந்த கொள்கை அம்சங்கள் மூலம் கட்டுமான உபகரண சூழல் அமைப்பை வலுப்படுத்துவதில் கனரக தொழில்துறை அமைச்சகத்தின் முக்கியப் பங்கை அமைச்சர் எடுத்துரைத்தார். அதிக மதிப்புள்ள, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டம் குறித்தும் அமைச்சர் கவனத்தை விளக்கினார்.
இந்திய கட்டுமான உபகரண சந்தை தற்போது சுமார் 9.5 பில்லியனாக டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும், 2030-ம் ஆண்டுக்குள் இது இருமடங்கிற்கும் அதிகமாகும் திறனைக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் இந்தத் துறையில் ஏற்படுத்தும் மாற்றத்தக்க தாக்கத்தை அவர் எடுத்துரைத்தார்.
இதில் ஒரு நெகிழ்ச்சியான கடன் நிதிச் சூழல் அமைப்பு சிறந்த பலன்களை ஏற்படுத்தும் என்று அமைச்சர் கூறினார்.
கட்டுமான உபகரணங்கள் உற்பத்தி, நிதியுதவிக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை நிலைநிறுத்த கூட்டு நடவடிக்கைக்கு அமைச்சர் திரு எச்.டி. குமாரசாமி அழைப்பு விடுத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232580®=3&lang=1
(Release ID: 2232580)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2232811)
வருகையாளர் எண்ணிக்கை : 8