தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

யாசகர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்த விவாதத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் நடத்தியது

இடுகை இடப்பட்ட நாள்: 25 FEB 2026 12:19PM by PIB Chennai

எல்யாசகர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் : கொள்கை, நடைமுறை ஆகியவற்றுக்கு இடையிலான இடைவெளிகளைக் குறைத்தல்' என்ற தலைப்பில் நேரடியாகவும், காணொலி முறையிலும் கூடிய ஒரு திறந்தவெளி விவாதத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்தது. இதற்கு மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர், நீதிபதி டாக்டர் பித்யுத் ரஞ்சன் சாரங்கி தலைமை வகித்தார். உறுப்பினர் திருமதி விஜய பாரதி சயானி, பொதுச் செயலாளர் திரு பாரத் லால் உள்ளிட்டோரும், மத்திய, மாநில அரசுகளைச் சேர்ந்த மூத்த அரசு அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.

யாசகம் ஒரு சமூக தீமை என்றும், அது நாட்டில் ஒரு தீவிரமான சமூகப் பிரச்சினையாகத் தொடர்ந்து நீடிக்கிறது என்றும் நீதிபதி சாரங்கி கூறினார். உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும் நாட்டில் கூட, பிச்சை எடுப்பது தொடர்வது கவலை அளிப்பதாகவும், இதில் அவசர கவனம் தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். யாசகம் என்பது வெறும் பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல எனவும், கண்ணியத்தையும் அரசியலமைப்பு உரிமைகளையும் பாதிக்கும் ஒரு சமூக நோயாகும் என்றும் அவர் விவரித்தார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவின் கீழ் சட்டத்தின் முன் சமத்துவ உரிமை என்ற வாக்குறுதி, பிச்சை எடுப்பவர்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் அர்த்தமுள்ள வகையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஒவ்வொரு தனிநபரும் பாதுகாப்பான, பத்திரமான, கண்ணியமான வாழ்க்கையை வாழ உரிமையுடையவர்கள் என்று அவர் கூறினார். பல மாநிலங்கள் பிச்சை எடுப்பதைத் தடுக்கும் சட்டங்களை இயற்றியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும், அத்தகைய சட்டங்களின் உண்மையான பலன், குறிப்பாக மறுவாழ்வு, ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படாவிட வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் யாசகம் வேண்டுவதை தடுப்பது, மறுவாழ்வு ஆகியவை குறித்து இதில் பங்கேற்றவர்கள் விரிவாக பரிந்துரைகளை வழங்கினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232570&reg=3&lang=1

(Release ID: 2232570)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2232810) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Gujarati , Urdu , हिन्दी