ஊரக வளர்ச்சி அமைச்சகம்
அசாம் மாநிலம் மஜூலியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திரு கம்லேஷ் பாஸ்வான் பங்கேற்பு
प्रविष्टि तिथि:
25 FEB 2026 6:27PM by PIB Chennai
அசாம் மாநிலம் மஜூலி மாவட்டத்திற்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ள மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திரு கம்லேஷ் பாஸ்வான், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
கரமூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தாயின் பெயரில் மரக்கன்று நடும் திட்டத்தில் பங்கேற்று மரக்கன்றை நட்டு வைத்தார். நீடித்த சுற்றுச்சூழலுக்கான நடவடிக்கைகளில் சமூகம் சார்ந்த பங்களிப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இதனையடுத்து, குபின்பூர் மாதிரி அங்கன்வாடி மையத்திற்கு சென்று பார்வையிட்ட அவர், அங்குள்ள மாணவர்கள், பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
சிறார்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குவது மற்றும் அடிப்படைக் கல்வி மூலம் தற்சார்பு நிலையை எட்டப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து திரு கம்லேஷ் பாஸ்வான் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232790®=3&lang=1
***
TV/SV/RJ/SH
(रिलीज़ आईडी: 2232805)
आगंतुक पटल : 55