தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

தேர்தல் ஆணையம் நடத்திய தேசிய வட்டமேசை மாநாட்டில், அரசியல் சாசன, தேசிய நலன்களை வலுப்படுத்தும் நோக்கில் இணைந்து பணியாற்ற தேர்தல் ஆணையமும் மாநில தேர்தல் ஆணையங்களும் முடிவு செய்துள்ளன

இடுகை இடப்பட்ட நாள்: 25 FEB 2026 4:18PM by PIB Chennai

தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த மாநில தேர்தல் ஆணையர்களின் தேசிய வட்டமேசை மாநாடு நேற்று (செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 24, 2026) புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது.

தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார் தலைமையில், தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து, டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற தேசிய வட்டமேசை மாநாட்டில் 30 மாநிலங்களின் மாநிலத் தேர்தல் ஆணையங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

27 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு வெற்றிகரமாக நடத்தப்பட்ட தேசிய வட்டமேசை மாநாட்டை மாநில தேர்தல் ஆணையர்கள் பெரிதும் பாராட்டினர். தேர்தல் ஆணையமும், மாநிலப் தேர்தல் ஆணையங்களும் இந்த தேசிய வட்டமேசை மாநாட்டை ஆண்டுதோறும் நடத்தத் தீர்மானித்தன.

தலைமை தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார் தலைமையில், அனைத்து மாநில தேர்தல் ஆணையங்களும் தேசிய பிரகடனத்தை ஏற்றுக்கொண்டன. மேலும், பிழையில்லாத துல்லியமான வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பது ஜனநாயகத்தின் அடிப்படை என்றும், தேர்தல்களை வெளிப்படையாகவும் திறமையாகவும் நடத்துவது ஜனநாயக நிறுவனங்களை மேலும் வலுப்படுத்தும் என்றும் இதில் தெரிவிக்கப்பட்டது.

தேசிய, அரசியலமைப்பு நலனுக்காக, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில தேர்தல் ஆணையங்களுடன் இணைந்து பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறைகள், சட்டப்பூர்வமாக கட்டமைப்புகளை உருவாக்க தேசிய தேர்தல் ஆணையம் முன்மொழிந்தது.

பஞ்சாயத்துகள், நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை நாடாளுமன்ற, மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் தொடர்பான சட்டங்களுடன் ஒருங்கிணைக்கவும், ஒத்துழைப்பை வலுப்படுத்தவும்  முடிவு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232682&reg=3&lang=1

 

***

(Release ID : 2232682)

AD/PLM/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2232770) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Malayalam