குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

டார்ஜிலிங்கை சேர்ந்த இளைஞர்களுடன் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று உரையாடினார்

प्रविष्टि तिथि: 24 FEB 2026 4:35PM by PIB Chennai

டார்ஜிலிங்கை சேர்ந்த இளைஞர்களுடன் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று குடியரசுத் துணைத்தலைவர் மாளிகையில் உரையாடினார்.

இளைஞர்களிடம் அவர்களுடைய பிராந்தியத்தின் இயற்கை அழகு, வளமான கலாச்சாரம், நாட்டிற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பு குறித்து உரையாடியது மிகவும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய விஷயம் என்று  தெரிவித்தார். இளைஞர்கள் நம்பிக்கையான மற்றும் எதிர்காலத்தை நோக்கிய இந்தியாவின் விருப்பங்களை கொண்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் மக்கள் தொகை வலிமையை அதன் சிறந்த சொத்துக்களில் ஒன்றாக குறிப்பிட்ட திரு சி பி ராதாகிருஷ்ணன், வளர்ச்சியடைந்த இந்தியா, தற்சார்பு இந்தியா தொலைநோக்கு பார்வைக்கேற்ப புதுமை கண்டுபிடிப்புகள், தற்சார்புடன் பங்களிக்குமாறு இளைஞர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இந்த உரையாடலின் போது இடப்பெயர்வு, நிலையான சுற்றுலா, பேரிடர் மீட்பு, டார்ஜிலிங் தேயிலை மற்றும் விளையாட்டு உட்கட்டமைப்பு குறித்து மாணவர்கள் குடியரசுத் துணைத்தலைவரிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த குடியரசுத் துணைத்தலைவர், அடையாளம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232174&reg=3&lang=1

 

****

TV/IR/RK/SH


(रिलीज़ आईडी: 2232405) आगंतुक पटल : 70
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Malayalam