தேசிய மனித உரிமைகள் ஆணையம்
தாய்லாந்தில் சிறைபிடிக்கப்பட்ட ஒடிசாவைச் சேர்ந்த 6 தொழிலாளர்கள்; தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை
இடுகை இடப்பட்ட நாள்:
23 FEB 2026 2:31PM by PIB Chennai
தாய்லாந்தின் பாங்காக் அருகே பணிபுரியச் சென்ற ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் அவர்களது நிறுவன உரிமையாளரால் கடந்த 6 மாதங்களாக சிறை பிடிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட காணொலிக் காட்சி 2026 பிப்ரவரி 17 அன்று வெளியான நிலையில் இச்சம்பவம் தெரியவந்தது. தொழிற்சாலைக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் உடல் மற்றும் மன ரீதியாக நிறுவன உரிமையாளரால் துன்புறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. செய்திகளில் வெளியான தகவல் உண்மையெனில், இது மனித உரிமைகளை மீறும் செயல் என்று ஆணையம் கருதுகிறது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஏதேனும் உதவிகள் அளிக்கப்பட்டதா என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் தெரிவிக்குமாறு வெளியுறவு அமைச்சகத்தை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
2026 பிப்ரவரி 19 அன்று ஊடகங்களில் வெளியான தகவலின்படி, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நல்ல ஊதியத்துடன் சிறந்த வேலை அளிப்பதாக கூறி, தாய்லாந்திற்கு தொழிலாளர் ஒப்பந்ததாரர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆனால், அவர்கள் மரத் தொழிற்சாலையில் நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் எந்த ஊதியமும், முறையான உணவும் இன்றி பணிபுரிய கட்டாயப்படுத்தப்பட்டனர். அவர்களுடைய பாஸ்போர்ட்டையும் தொழிற்சாலை உரிமையாளர் பறிமுதல் செய்து வைத்திருந்தார்.
இதையடுத்து தாங்கள் தாயகம் திரும்ப உதவுமாறு காணொலி வாயிலாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2231718®=3&lang=1
AD/IR/LDN/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2231758)
வருகையாளர் எண்ணிக்கை : 13