அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

இந்தியாவின் அடுத்த வேளாண் புரட்சி செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

प्रविष्टि तिथि: 22 FEB 2026 6:09PM by PIB Chennai

இந்தியாவின் அடுத்த விவசாயப் புரட்சி செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் என்று மத்திய அறிவியல் - தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். மும்பையில் இன்று (22.02.2026) நடைபெற்ற விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான உச்சி மாநாட்டில் அவர் உரையாற்றினார்.

வேளாண் உற்பத்தித்திறனை பாதிக்கும் ஒழுங்கற்ற வானிலை, சமச்சீரற்ற தகவல் தன்மை போன்றவற்றுக்கு செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை வழங்கும் என்று கூறினார். விவசாயிகள் பயிரிடுவதை திட்டமிடுவதற்கு உதவும் வகையில் புவி அறிவியல் மற்றும் செயற்கைக்கோள் அமைப்புகள் ஒருங்கிணைக்கப்படும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

பூச்சி மற்றும் தாவர நோய்களை முன்கூட்டியே முறையில் கண்டறிதல் உட்பட, நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பயிர்களை வளர்ப்பதிலும், சுழற்சிப் பயிர் பொருளாதாரத்தை முன்னேற்றுவதிலும் உயிரி தொழில்நுட்பத்தின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார். இந்திய மண் வகைகள், பருவநிலை மண்டலங்கள், பயிர் வகைகள் குறித்து பயிற்சியளிக்க உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் மீது கவனம் செலுத்தப்படுகிறது எனவும் இதை மொபைல் போன்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் மூலம் கிராமப்புறங்களில் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார். உலகளாவிய வேளாண் செயற்கை நுண்ணறிவு கட்டமைப்புகளின் வடிவமைப்பாளராக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தியா செயலாற்றி வருவதாக டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2231508&reg=3&lang=1

***

TV/PLM/RK


(रिलीज़ आईडी: 2231547) आगंतुक पटल : 123
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati