பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மத்திய அரசு ஊழியர்களுக்கான பணி ஓய்வுக்கு முந்தைய ஆலோசனை குறித்த பயிலரங்கு - மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் நாளை குவாஹத்தியில் தொடங்கி வைக்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
22 FEB 2026 4:26PM by PIB Chennai
ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு "வாழ்க்கையை எளிதாக்குவதை" மேம்படுத்துவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, மத்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை முற்போக்கான முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஓய்வூதியக் கொள்கை மற்றும் ஓய்வூதியம் தொடர்பான செயல்முறைகளை டிஜிட்டல் மயமாக்குவதில் இந்த முயற்சிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பணியாளர் நலன், ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், மத்திய அரசுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களுடன் இணைந்து இத்துறை ஏற்பாடு செய்துள்ள பணி ஓய்வுக்கு முந்தைய ஆலோசனை குறித்த 58 வது பயிலரங்கத்தை நாளை (பிப்ரவரி 23, 2026) அசாமின் குவஹாத்தி நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் தொடங்கி வைக்கிறார்.
இந்த பயிலரங்கு, ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களின் நலனுக்காக நடத்தப்படுகிறது. மேலும் இது ஓய்வூதியதாரர்களின் 'வாழ்க்கையை எளிதாக்கும்' திசையில் இது ஒரு உறுதியான நடவடிக்கையாகும். ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பலன்கள் சுமுகமாக பலன்கள் கிடைப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு அமர்வுகள் இந்தப் பயிலரங்கில் நடத்தப்படும்.
அசாம் மாநிலத்தில் அடுத்த 12 மாதங்களில் ஓய்வு பெறவிருக்கும் சுமார் 350 பேர், இந்த ஓய்வூதியத்திற்கு முந்தைய ஆலோசனைப் பயிலரங்கில் பெரிதும் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர, இந்தத் துறை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைந்து வங்கியாளர்கள் விழிப்புணர்வுக் கூட்டத்தையும் ஏற்பாடு செய்துள்ளது . மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏற்றவாறு பல்வேறு ஓய்வூதியம் தொடர்பான விதிகள் மற்றும் நடைமுறைகள் குறித்து ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளிடையே விழிப்புணர்வைப் பரப்புவதே இந்தப் பயிலரங்கின் நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2231483®=3&lang=1
***
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2231536)
வருகையாளர் எண்ணிக்கை : 11