குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா-பிரேசில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
இடுகை இடப்பட்ட நாள்:
21 FEB 2026 6:08PM by PIB Chennai
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தலைமையிலான உயர்நிலைக் குழுவின் இந்தியா வருகையின் போது, மத்திய அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகம், பிரேசில் அரசின், குறு, சிறு நிறுவனங்கள் அமைச்சகத்துடன் இன்று (21.02.2026) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு நாடுகளிலும் உள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும், இரு நாடுகளிலும் உள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் ஒத்துழைப்பு குறித்து ஆராயவும் ஒரு தளத்தை வழங்கும். இரு நாடுகளின் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களும் ஒருவருக்கொருவர், சந்தைகள், தொழில்நுட்பங்கள், கொள்கைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள ஒரு சூழலையும் இது வழங்கும்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், பசுமை எரிசக்தி மாற்றத்தை முன்னெடுப்பதற்கான சூழ்நிலைகளையும் உருவாக்க முயல்கிறது. இதில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பசுமை நிதியை அணுகுவதை எளிதாக்குதல், உலகளாவிய சந்தைகளில் அவற்றின் ஒருங்கிணைப்பை செயல்படுத்துதல், உற்பத்தித்திறன், போட்டித்தன்மையை மேம்படுத்துதல், நிலையான வளர்ச்சிக்கான திறனை வலுப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2231271®=3&lang=1
***
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2231367)
வருகையாளர் எண்ணிக்கை : 7