பிரதமர் அலுவலகம்
பு வுங்சாகின் வால்டேவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
21 FEB 2026 5:03PM by PIB Chennai
பு வுங்சாகின் வால்டேவின் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பு வுங்சாகின் வால்டே, மணிப்பூர் மக்களுக்காக ஆற்றிய சிறப்பான சேவைக்காக நினைவுகூரப்படுவார் என்று பிரதமர் கூறியுள்ளார். சமூகத்தில் ஒரு நேர்மறையான மாற்றத்தை கொண்டு வருவதற்காக வால்டே விடாமுயற்சியுடன் பணியாற்றியதையும், சட்டமன்றத்தில் அவரது உரைகள் எப்போதும் ஆழ்ந்த பார்வையுடையவையாக இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"பு வுங்சாகின் வால்டே மணிப்பூர் மக்களுக்காக ஆற்றிய சிறப்பான சேவைக்காக நினைவுகூரப்படுவார். அவர் சமூகத்தில் ஒரு நேர்மறையான மாற்றத்தை கொண்டு வருவதற்காக விடாமுயற்சியுடன் பணியாற்றினார். சட்டமன்றத்தில் அவரது உரைகள் எப்போதும் ஆழ்ந்த தொலைநோக்கு பார்வையுடன் இருந்தன. அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இரங்கல்கள்."
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2231231®=3&lang=1
***
TV/PKV/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2231336)
வருகையாளர் எண்ணிக்கை : 9