புவி அறிவியல் அமைச்சகம்
கடல்சார் நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப பங்களிப்பு மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தலைமையில் விவாத நிகழ்ச்சி
இடுகை இடப்பட்ட நாள்:
19 FEB 2026 12:01PM by PIB Chennai
எதிர்காலத்தில் கடல்சார்நிர்வாகம், தரவு மேலாண்மை, பேரிடர் அபாயக் குறைப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு, கடல்சார் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் குறித்த விவாதம் மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தலைமையில் நடைபெற்றது.
புதுதில்லியில் நடைபெற்று வரும் இந்திய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தாக்கம் குறித்த உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்த விவாதம் நடைபெறுகிறது.
இந்தியாவின் பெருங்கடல் நிர்வாகம், பேரிடர் மீள் தன்மை, கடல்சார் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவு முக்கியப் பங்கு வகிக்கும் என்று துறைசார் நிபுணர்கள் தெரிவித்தனர்.
இந்த விவாதத்தில் உரையாற்றிய இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் மொஹாபத்ரா பருவநிலை ஒழுங்குமுறை நடவடிக்கைகள் பேரிடர் அபாயக் குறைப்பு நடவடிக்கைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் கடல்சார் வாழ்வாதாரம் ஆகியவை முக்கியப் பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டார். பெருங்கடல் பகுதிகளில் கண்காணிப்புப் பணிகள் சூறாவளி குறித்த முன்னறிவிப்புகள் கடல்சார் தரவு முறைகள் முன்னெச்சரிக்கை சேவைகள் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களில் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இடர்பான தருணங்களில் உயிரிழப்புகளைக் குறைப்பதற்கு உதவிடும் என்று அவர் கூறினார்
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2230107®=3&lang=1
****
TV/SV/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2230420)
வருகையாளர் எண்ணிக்கை : 6