நிதி அமைச்சகம்
மத்தியப்பிரதேசத்தில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளின் சோதனையில் 52 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
இடுகை இடப்பட்ட நாள்:
19 FEB 2026 11:53AM by PIB Chennai
மத்தியப்பிரதேச மாநிலததில் போதைப்பொருள் தடுப்பு வாரிய அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 43.82 கிலோகிராம் மெத்தபெட்டமின் போதைப்பொருள் உட்பட 52 கிலோ எடை கொண்ட போதைப் பொருள்களும், 260 கிலோவுக்கும் அதிகமான ரசயானங்கள் மற்றும் அதிநவீன உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக 3 பேரை போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.
மத்தியப்பிரதேசத்தில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்கு கிடைத்துள்ள சிறப்பு புலனாய்வு தகவலின் அடிப்படையில் கடந்த 13-ம் தேதி இரவு அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இந்த சோதனை நடவடிக்கைகள் 15-ம் தேதி வரை தொடர்ந்தது.
மான்ட்சவுரில் போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக 2 பேரை போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போதைப் பொருளை பதுக்கி வைத்திருந்த உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்தப் போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் செயல்படும் நபர்களை அடையாளம் காணும் வகையில் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதைப்பொருள் நடமாட்டம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில், அதிகாரிகள் இது போன்ற தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2230106®=3&lang=1
----
AD/SV/KPG/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2230283)
வருகையாளர் எண்ணிக்கை : 13