பிரதமர் அலுவலகம்
அதிபர் டிரம்புடன் பிரதமர் உரையாடினார்
இந்திய உற்பத்திப் பொருட்கள் மீதான வரியை 18 சதவீதமாக குறைத்ததற்கு அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
02 FEB 2026 11:15PM by PIB Chennai
அதிபர் டிரம்புடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார். இந்தியாவின் பொருட்கள் மீதான வரியை 18 சதவீதமாக குறைத்து பாராட்டத்தக்க அறிவிப்பை வெளியிட்டதற்காக இந்தியாவின் 140 கோடி மக்கள் சார்பாக அதிபர் டிரம்புக்கு திரு மோடி நன்றி தெரிவித்தார்.
இரண்டு பெரிய பொருளாதாரங்களும், உலகின் பெரிய ஜனநாயகங்களும் இணைந்து பணியாற்றும் போது, அது நமது மக்களுக்கு பயனளிப்பதோடு, பரஸ்பர ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று திரு மோடி கூறியுள்ளார்.
“அதிபர் டிரம்பின் தலைமைத்துவம் உலகளாவிய அமைதி, நிலைத்தன்மை, வளம் ஆகியவற்றுக்கு முக்கியமானது. அமைதிக்கான அவரின் முயற்சிகளை முழுமையாக ஆதரிக்கிறது” என்று திரு மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:
“எனதருமை நண்பர் அதிபர் டிரம்புடன் பேசியது மிகச் சிறப்பானது, இந்திய தயாரிப்புகளுக்கான வரி தற்போது 18 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பாராட்டத்தக்க இந்த அறிவிப்பை வெளியிட்டதற்காக இந்தியாவின் 140 கோடி மக்கள் சார்பாக அதிபர் டிரம்புக்கு மிகப்பெரும் நன்றி.
இரண்டு பெரிய பொருளாதாரங்களும், உலகின் பெரிய ஜனநாயகங்களும் இணைந்து பணியாற்றும் போது, அது நமது மக்களுக்கு பயனளிப்பதோடு, பரஸ்பர ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
அதிபர் டிரம்பின் தலைமைத்துவம் உலகளாவிய அமைதி, நிலைத்தன்மை, வளம் ஆகியவற்றுக்கு முக்கியமானது. அமைதிக்கான அவரின் முயற்சிகளை முழுமையாக ஆதரிக்கிறது.
எங்களின் கூட்டு முயற்சிகளை முன் எப்போதும் இல்லாத உயரங்களுக்கு கொண்டு செல்ல அவருடன் நெருக்கமாக பணியாற்றுவதை நான் எதிர்நோக்கி இருக்கிறேன்.”
@POTUS
@realDonaldTrump
***
(Release ID: 2222399)
AD/SMB/RJ/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2229596)
வருகையாளர் எண்ணிக்கை : 36
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam