பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பான வெற்றியடைந்த சனா டக்காய்ச்சிக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 08 FEB 2026 9:34PM by PIB Chennai

ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பான வெற்றியடைந்த சனா டக்காய்ச்சிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா – ஜப்பான் இடையேயான சிறப்புமிக்க  உத்திசார்ந்த மற்றும் உலகளாவிய கூட்டாண்மை உலக அமைதி, நிலைத்தன்மை, செழுமை ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.

டக்காய்ச்சியின் தலைமைத்துவம் மூலம் இந்தியா – ஜப்பான் இடையேயான நட்புறவு தொடர்ந்து  மென்மேலும் வளர்ச்சியடையும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்த சமூக ஊடக எக்ஸ் தளத்தில் எழுதியிருப்பதாவது;

“நாடாளுமன்ற தேர்தலில் உங்களுடைய சிறப்பான வெற்றிக்காக வாழ்த்துகள் சனா டக்காய்ச்சி!

நமது சிறப்புமிக்க  உத்திசார்ந்த மற்றும் உலகளாவிய கூட்டாண்மை உலக அமைதி, நிலைத்தன்மை, செழுமை ஆகியவற்றை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

உங்களுடைய தலைமைத்துவத்தின் கீழ், இந்தியா – ஜப்பான் இடையேயான நட்புறவை நாம் தொடர்ந்து மென்மேலும் வளர்ச்சியடையச் செய்வோம் என்று நான் நம்புகிறேன்”.

***

(Release ID: 2225220)

AD/IR/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2229584) வருகையாளர் எண்ணிக்கை : 14