பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2026-27 நிதியாண்டின் பாலின பட்ஜெட் அறிக்கையில், மகளிர் மற்றும் சிறுமிகளின் நலனுக்காக ரூ. 5.01 லட்சம் கோடி ஒதுக்கீடு

இடுகை இடப்பட்ட நாள்: 18 FEB 2026 11:33AM by PIB Chennai

மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 2026-27-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மொத்த மத்திய பட்ஜெட்டில் பாலின பட்ஜெட் ஒதுக்கீட்டின் பங்கு, 2025-26 நிதியாண்டில் 8.86% ஆக இருந்த நிலையில், 2026-27 நிதியாண்டில் 9.37% ஆக அதிகரித்துள்ளது.

நிதியாண்டு 2026-27-ன் பாலின பட்ஜெட் அறிக்கையில், மகளிர் மற்றும் சிறுமியரின் நலனுக்காக ரூ.5.01 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, நிதியாண்டு 2025-26-ல் ஒதுக்கப்பட்ட ரூ.4.49 லட்சம் கோடியை விட 11.55% அதிகமாகும்.

இந்த ஆண்டு மொத்தம் 53 அமைச்சகங்கள்/துறைகள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்கள் ஒதுக்கீடுகளை அறிவித்துள்ளன, இது 2025-26 நிதியாண்டில் 49 அமைச்சகங்கள்/துறைகள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களுடன் ஒப்பிடப்படுகிறது. இது தொடங்கப்பட்டதிலிருந்து பாலின பட்ஜெட் அறிக்கையில் அமைச்சகங்கள்/துறைகள் அறிவித்த மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். நான்கு புதிய அமைச்சகங்கள்/துறைகள் 2026-27 நிதியாண்டின் பாலின பட்ஜெட் அறிக்கையில் ஒதுக்கீடுகளை அறிவித்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2229460&reg=3&lang=1

***

AD/PKV/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2229558) வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati