மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

நுகர்வோர் என்பதிலிருந்து உலகளாவிய ஏஐ தயாரிப்பாளர் என்ற இந்தியாவின் மாற்றத்திற்கு இறையாண்மை மிக்க ஏஐ என்பது முக்கியமானதாகும்

இடுகை இடப்பட்ட நாள்: 17 FEB 2026 4:29PM by PIB Chennai

புதுதில்லியில் நடைபெறும் இந்தியா செயற்கைக்கோள் (ஏஐ) தாக்கம் உச்சிமாநாடு 2026-ல் “இந்தியாவின் இறையாண்மை மிக்க ஏஐ மற்றும் தரவிலிருந்து அதிகரிக்கும் தாக்கம்” என்ற தலைப்பிலான அமர்வில், இந்தியா தொடக்கத்தில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டாளர் என்ற நிலையிலிருந்து உலகத்திற்கு பொருத்தமான ஏஐ தயாரிப்பாளராக எவ்வாறு மாறியது என்பதில் கவனம் செலுத்தப்பட்டது.

இறையாண்மை மிக்க செயற்கை நுண்ணறிவுக்கு இந்திய மொழிகள் மற்றும் சமூக சூழல்களுக்கு ஏற்ற உள்நாட்டு மாதிரிகளை உருவாக்குதல், உறுதியான உள்நாட்டு அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்குதல், அடிப்படை ஆய்வை பலப்படுத்துதல் என்ற 3 முக்கிய அம்சங்களை இந்த அமர்வில் உரையாற்றியவர்கள் கோடிட்டுக் காட்டினர்.

தேசிய தகவல் மையத்தின் (என்ஐசி) தலைமை இயக்குநரும், மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூடுதல் செயலாளருமான திரு அபிஷேக் சிங் உரையாற்றுகையில், இறையாண்மை மிக்க ஏஐ என்பதன் பொருள் தனித்து செயல்படுவது என்பதல்ல, இறையாண்மை மிக்க ஏஐ என்பதன் பொருள் ஏஐ அமைப்பு முறைகளை எவ்வாறு வடிவமைப்பது, பயன்படுத்துவது, நிர்வகிப்பது என்பதில் உள்ள கட்டுப்பாட்டைக் குறிப்பதாகும். சுகாதார கவனிப்பு, கல்வி, வேளாண்மை, நிதி உள்ளடக்கம் ஆகியவற்றில் உண்மையான சவால்களுக்கு தீர்வு காண ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். இதன் மூலம் குடிமக்கள் தங்களின் சொந்த மொழிகளில் சேவைகளைப் பெற முடியும் என்றும் அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும் என்றும் அவர் கூறினார்.

பாரத்ஜென் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ரிஷி பால் பேசுகையில், ஏஐ பயன்பாடு என்பது அனைத்துத் துறைகளிலும் இடம் பெறும். ஆனால், படிப்படியாக கவனத்துடன் அமலாக்கப்பட வேண்டும் என்றார். இறையாண்மை மிக்க செயற்கை நுண்ணறிவுக்கு தேசிய அளவில் மாதிரிகளுக்கான சூழல் அமைப்பை உருவாக்குவதும், பரவலாக பயன்படுத்தும் உள்கட்டமைப்பை உருவாக்குவதும் அவசியம் என்று அவர் கூறினார்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் – இஸ்ரோவின் தகவல் அமைப்பு முறைகள் மற்றும் நிர்வாக இயக்குநரகத்தின் இயக்குநர் திரு ராஜீவ் ரத்தன் சேத்வானி, செயற்கை நுண்ணறிவின் உத்திசார் முக்கியத்துவத்தை விவரித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2229140&reg=3&lang=1

***

AD/SMB/RJ/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2229269) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Telugu