கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கூட்டுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் குஜராத்தில் நாளை நடைபெறுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 16 FEB 2026 4:25PM by PIB Chennai

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கூட்டுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் உயர்நிலை விவாதக் கூட்டம் மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திரில் 2026 பிப்ரவரி 17 அன்று நடைபெற உள்ளது.

இத்துறையைச் சேர்ந்த கூடுதல் தலைமைச் செயலாளர், முதன்மைச் செயலாளர், செயலாளர் நிலையிலான அதிகாரிகளும் இதில் பங்கேற்கின்றனர். கூட்டுறவு அமைச்சகத்தின் முன்முயற்சிகள் குறித்து விரிவான ஆய்வு, இதுவரை நடைபெற்ற வளர்ச்சி குறித்த மதிப்பீடு, மாநிலங்களின் சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்கள் பரிமாற்றம், எதிர்காலத்திற்கான ஒருங்கிணைந்த திட்டமிடல் ஆகியவற்றிற்கு இது தளமாக அமையும். ஊரகப் பொருளாதாரத்திற்கு புதிய தருணத்தை அளிப்பதை நோக்கமாகக் கொண்டு 2 லட்சம் புதிய பன்னோக்கு தொடக்க வேளாண் கடன் சங்கங்கள், பால் மற்றும் மீன்வளர்ப்பு கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றை ஏற்படுத்துவதில் உள்ள முன்னேற்றங்கள் குறித்த விவாதங்கள் நடைபெறும். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2228701&reg=3&lang=1

****

TV/IR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2228893) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Kannada