தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

இந்தியா ஏஐ தாக்கம் கண்காட்சி 2026: 51 புத்தொழில் நிறுவனங்களின் புத்தாக்க காட்சி

இடுகை இடப்பட்ட நாள்: 16 FEB 2026 4:21PM by PIB Chennai

இந்தியாவின் ஊடகம்  மற்றும் பொழுதுபோக்கு துறைக்கு புதிய ஊக்கமாக, ஏவிஜிசி மற்றும் மீடியா டெக் துறையைச் சேர்ந்த 51 புத்தொழில் நிறுவனங்கள் , இந்தியா ஏஐ தாக்க கண்காட்சியின் ஒரு பகுதியாக நடைபெறும் வேவ்ஸ் படைப்பாளர் பகுதியில்  தங்களின் ஏஐ அடிப்படையிலான தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்துகின்றன. இது பாரத் மண்டபத்தில்  பிப்ரவரி 16 முதல் 20, 2026 வரை நடைபெறுகிறது.

தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின்  ஆதரவுடன் நடைபெறும் இந்த முயற்சிக்கு வேவ்ஸ் எக்ஸ் துணைநிற்கிறது. இந்தியாவின் படைப்பாற்றல் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும்.

ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அனிமேஷன் கருவிகள், கேமிங் புதுமைகள், விர்ச்சுவல் புரொடக்ஷன் சாதனங்கள் மற்றும் புதிய தலைமுறை உள்ளடக்கத் தீர்வுகள் இதில் காட்சிப்படுத்தப்படுகின்றன.

இந்த  நிகழ்ச்சியுடன் இணைந்து, “Zero-Touch Autonomous Newsroom” என்ற அமைப்பு மனித தலையீடு இன்றி நேரடி நிகழ்வுகளை இந்தி, ஆங்கிலம், தமிழ் மொழிகளில் செய்திகளாக மாற்றும் வசதியை அறிமுகப்படுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2228700&reg=3&lang=1

****

TV/PKV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2228890) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Telugu , Kannada , Malayalam