PIB Headquarters
வளர்ச்சி எந்திரங்களாக படைப்பாக்கத் தொழில்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
16 FEB 2026 11:44AM by PIB Chennai
21-ம் நூற்றாண்டு தொழில்துறை அளவுக்கு கற்பனையாலும் வடிவமைக்கப்படுகிறது. பொருளாதார பலம் என்பது தொழிற்சாலைகள், சரக்குப் போக்குவரத்து வழித்தடங்கள் ஆகியவற்றால் மட்டும் அளவிடப்படும் காலம் மாறி அறிவுசார் சொத்து, டிஜிட்டல் களங்கள், கலாச்சார செல்வாக்கு ஆகியவற்றாலும் அளவிடப்படுகிறது. சரக்குகளைவிட சிந்தனைகள் அதிகாரமாக பயணம் செய்கின்றன. கதையாடல்கள் சந்தைக்குள் செல்கின்றன. நாடுகள் எவ்வாறு உலக அளவில் பார்க்கப்படுகின்றன புரிந்துகொள்ளப் படுகின்றன என்பதை படைப்பாக்கச் சூழல்கள் தீர்மானிப்பது அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் படைப்பாக்கப் பொருளாதாரம் வளர்ச்சியை தீர்மானிக்கும் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
படைப்பாக்க பொருளாதாரம் என்பது முதன்மையாக படைப்பாக்கம், கலாச்சாரம், தொழில்நுட்பம், அறிவுசார் சொத்து ஆகியவற்றால் உருவாக்கப்படும் தொழில்களை உள்ளடக்கியதாக நிற்கிறது. ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, அனிமேஷன் மற்றும் ஒளிக்காட்சிகள், விளையாட்டு, நேரடி கலாச்சார அனுபவங்கள், டிஜிட்டல் உள்ளடக்கத் தளங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த பொருளாதாரம் உள்ளது.
உலக அளவில் படைப்பாக்கத் தொழில்துறைகள் பல நாடுகளுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை பங்களிப்பு செய்கின்றன. உலக அளவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் அடிப்படையில் இந்தியாவின் படைப்பாக்கப் பொருளாதாரம் என்பது வளர்ச்சி, வேலைவாய்ப்பு, மதிப்புருவாக்கம் ஆகியவற்றின் முக்கிய தூணாக மாறியுள்ளது.
இந்தியாவில் 2024-ல் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறையின் மதிப்பு சுமார் 2.5 டிரில்லியன் ரூபாயாக இருந்தது. டிஜிட்டல் ஊடக கணக்கு இந்த துறையின் வருவாயில் மூன்றில் ஒரு பங்காக அனிமேஷன் மற்றும் ஒளிக்காட்சித்துறை மூலமான வருவாய் 103 பில்லியன் ரூபாயாகவும், விளையாட்டுத்துறை (கேமிங்) மூலமான வருவாய் 232 பில்லியன் ரூபாயாகவும், நேரலை பொழுதுபோக்கு மூலமான வருவாய் 100 பில்லியன் ரூபாயாகவும் இருந்தது. இந்தத் துறை மூலம் நேரடியாகவும் மறைமுகமாவும் 10 மில்லியன் பேர் வாழ்வாதாரம் பெறுகின்றனர். வருடாந்தர மொத்த வருவாய் சுமார் 3 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
இந்தியாவின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத்துறை சீராக தமது பாதையை விரிவுபடுத்தி 2027-க்குள் 7 சதவீத வருடாந்தர வளர்ச்சியை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 2024-ல் 2,502 பில்லியன் ரூபாய் என்பதிலிருந்து 2,027-ல் 3067 மில்லியன் ரூபாயாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கல்வி, திறன் வழங்குதல், நிறுவனங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வதை மையமாகக் கொண்டே ஆரஞ்சு பொருளாதாரம் விரிவடையும். இதற்காக பள்ளிகளில் சிறப்பு வாய்ந்த பயிற்சி, புதிய கண்டுபிடிப்புடன் கூடிய தொழில் முனைவு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. 15 ஆயிரம் மேல்நிலைப் பள்ளிகள் 500 கல்லூரிகள் ஆகியவற்றில் நிறுவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஏவிஜிசி உள்ளடக்க உருவாக்க ஆய்வுக்கூடங்கள் மூலம், நிறுவன உந்துதல் வலுப்படுத்தப்படும். இந்த முன்முயற்சி திறமை வாய்ந்த புதிய தலைமுறையை தயார் செய்கிறது. இந்த வகையில் ஏவிஜிசி துறையில் 2030 வாக்கில் சுமார் 20 லட்சம் தொழில்முறையாளர்கள் தேவைப்படுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கொள்கை என்பது நடைமுறையிலிருந்து தனியானதாக இனி இருக்க முடியாது. கற்பனைத் திறன் என்பது வாழ்வாதாரங்களை, தொழில் நிறுவனங்களை சர்வதேச கூட்டாண்மைகளை உருவாக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கம் ஏற்கனவே கண்கூடாக தெரியத் தொடங்கியுள்ளன. இளம் கலைஞர்கள் உலகளாவிய தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். படைப்பாக்க தொழில் துறைகள் மூலம் இந்தியா வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. சேவைகளை ஏற்றுமதி செய்கிறது. தனது உலகளாவிய இருப்பை வலுப்படுத்திக் கொள்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2228572®=3&lang=1
***
TV/SMB/LDN/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2228773)
வருகையாளர் எண்ணிக்கை : 11