தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐரோப்பிய திரைப்படச் சந்தை (இஎஃப்எம்) பெர்லின் 2026-ல் திரைப்பட வசதிக் கட்டமைப்பு மற்றும் சுற்றுலா சூழல் அமைப்பை தில்லி அரசு சிறப்பாக வெளிப்படுத்தியது

இடுகை இடப்பட்ட நாள்: 15 FEB 2026 5:07PM by PIB Chennai

இந்தியாவின் உலகளாவிய திரைப்பட விளம்பர முயற்சிகளின் ஒரு பகுதியாக, பெர்லினில் உள்ள ஐரோப்பிய திரைப்பட சந்தையில் தில்லி அரசின் பங்கேற்பு மற்றும் விளக்கக்காட்சியை மத்திய  தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் எளிதாக்கியது. இந்தியாவின் படைப்பு மற்றும் சினிமா சூழல் அமைப்பை சர்வதேச திரைப்படத் துறைக்குக் காண்பிப்பதற்கான முக்கிய தளமாக செயல்படும் வேவ்ஸ் சந்தையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட பாரத விழாவில் இந்த விளக்கக்காட்சி இடம்பெற்றது.

தில்லி அரசின் சுற்றுலா மற்றும் கலை, கலாச்சாரத் துறை அமைச்சர் திரு கபில் மிஸ்ரா; தில்லி சுற்றுலா நிறுவனத்தின்  நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு சுனீல் அஞ்சிபகா, அமைச்சரின் செயலாளர் திரு வினய் குமார் ஜிண்டால்; திரைப்பட படப்பிடிப்பு ஊக்குவிப்புப் பிரிவின் மேலாளர் திருமதி மாணிக்ஷா பக்ஷி ஆகியோர் தில்லி பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

சர்வதேச தயாரிப்பாளர்கள், ஸ்டுடியோக்கள், விழா நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் மற்றும் சந்தை பங்குதாரர்களுடன் பிரதிநிதிகள் குழு கலந்துரையாடியது. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பாரம்பரியம், கலாச்சார துடிப்பு மற்றும் நவீன உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி திரைப்படத்திற்கு ஏற்ற உலகளாவிய நகரமாக மாறுவதற்கான தில்லியின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்தார். பெரிய அளவிலான உள்நாட்டு மற்றும் சர்வதேச தயாரிப்புகளை ஈர்ப்பதற்கு ஆக்கபூர்வமான கொள்கை ஆதரவும் நிறுவன ஒருங்கிணைப்பும் மையமாக உள்ளன என்று அவர் கூறினார்.

உலகளாவிய திரைப்படப் பரிமாற்றத்திற்கு ஒரு முக்கிய தளமான தில்லி சர்வதேச திரைப்பட விழாவின் பங்கும் எடுத்துரைக்கப்பட்டது. இந்த விழா, உலகெங்கிலும் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பார்வையாளர்களை ஒன்றிணைக்கும் வளர்ந்து வரும் சர்வதேச நிகழ்வாகக் காண்பிக்கப்பட்டது. அதே நேரத்தில் பல்வேறு கலாச்சார உரையாடல்களை ஊக்குவித்து திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு சர்வதேச வெளிப்பாடு மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை வழங்கியது.

இஎஃப்எம் பெர்லினில் நடந்த நிகழ்வு, தில்லியின் சர்வதேச இருப்பை விரிவுபடுத்துவதிலும், திரைப்பட சுற்றுலாவை மேம்படுத்துவதிலும், உலகளாவிய ஒத்துழைப்புகளுக்கான போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் திரைப்பட துறைக்கு ஏற்ற இடமாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதிலும் ஒரு குறிப்பிடத்தக்க முன்னெடுப்பைக் குறிப்பதாக இருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2228422&reg=3&lang=1

***

TV/SMB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2228482) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , English , Urdu , हिन्दी , Telugu