சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடந்த 6 ஆண்டுகளில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் அதிகரித்துள்ளது தேசிய மருத்துவ ஆணையம்

இடுகை இடப்பட்ட நாள்: 13 FEB 2026 1:37PM by PIB Chennai

கடந்த 6 ஆண்டுகளில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020-21 கல்வியாண்டில் இருந்து 2025-26 கல்வியாண்டு வரை இளநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களின் எண்ணிக்கை 48,563 ஆகவும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை 29,080 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2025-26-ம் நிதியாண்டு முதல் 2028-29-ம் நிதியாண்டு வரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் மத்திய நிதியுதவி திட்டங்களின் கீழ், 10,023 இடங்களை அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. குறிப்பாக பின்தங்கிய பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கான எண்ணிக்கையில் உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையிலும், மாநிலங்களில் மக்கள் தொகை விதிதத்திற்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையிலும் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டு வருதவாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 2227421)

TV/SV/RJ/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2227876) வருகையாளர் எண்ணிக்கை : 24
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Telugu