பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியக் கடலோர காவல்படைக்கு 8 டார்னியர் 228 ரக இரட்டை என்ஜின் கொண்ட சிறிய விமானம் வாங்க ரூ.2,312 கோடி ஒப்பந்தம்
प्रविष्टि तिथि:
12 FEB 2026 4:15PM by PIB Chennai
இந்தியக் கடலோர காவல்படைக்காக ரூ.2,312 கோடி மதிப்பில் 8 டார்னியர் 228 ரக விமானங்களை கொள்முதல் செய்ய கான்பூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. புதுதில்லியில் 2026 பிப்ரவரி 12 அன்று நடைபெற்ற இந்த ஒப்பந்தம், பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் தலைமையில் கையெழுத்தானது.
இதன் மூலம் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி அதிகரித்து நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு உருவாகும் என்றும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் அதுசார்ந்த நிறுவனங்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்சார்பு இந்தியா, மேக்-இன் இந்தியா ஆகிய மத்திய அரசு திட்டங்களுக்கு இந்த ஒப்பந்தம் வலுசேர்க்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2227031®=3&lang=1
***
TV/IR/RJ/SH
(रिलीज़ आईडी: 2227207)
आगंतुक पटल : 69