பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கனடாவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 11 FEB 2026 3:43PM by PIB Chennai

கனடாவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் திரு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தத் துயரமான தருணத்தில் இந்தியா, கனடா மக்களுக்கு உறுதுணையாக இருப்பதாக திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

“கனடாவில் நிகழ்ந்த பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். இந்தத் துயரமான தருணத்தில் இந்தியா, கனடா மக்களுக்கு உறுதுணையாக உள்ளது”.

-----

(Release ID: 2226376

TV/IR/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2226603) வருகையாளர் எண்ணிக்கை : 23