பிரதமர் அலுவலகம்
‘பஸ்தார் பாண்டும்’ திருவிழாவின் சிறப்புக் கொண்டாட்டத்திற்காக சத்தீஸ்கர் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
10 FEB 2026 10:42AM by PIB Chennai
சத்தீஸ்கரில் பிப்ரவரி 7 முதல் 9 வரை நடைபெறும் ‘பஸ்தார் பாண்டும்’ திருவிழாவின் சிறப்புக் கொண்டாட்டத்திற்காக சத்தீஸ்கர் மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இத்திருவிழாவில் பஸ்தாரின் வளமையான கலாச்சாரம், பாரம்பரியங்கள் மற்றும் பழங்குடியின பாரம்பரியம் குறித்து சிறப்பான வழிகளில் எடுத்துக்காட்டப்படுகிறது. இது போன்ற நிகழ்வுகள் நமது கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும் உள்ளூர் சமூகத்தினருக்கு அதிகாரம் அளிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
“முன்னதாக பஸ்தார் என்ற பெயரைக் குறிப்பிடும் போதெல்லாம் மாவோயிஸ பிம்பம், வன்முறை பின்தங்கிய வளர்ச்சி ஆகியவை மனதில் ஏற்படும். ஆனால் தற்போது சூழ்நிலை முழுமையாக மாறியுள்ளது. பஸ்தார் என்பது அதன் வளர்ச்சிக்காக அறிவது மட்டுமின்றி உள்ளூர் மக்களின் வளர்ந்து வரும் தன்னம்பிக்கையையும் குறிப்பிடுகிறது. வருங்காலத்தில் இப்பிராந்தியம் அமைதி, செழுமை மற்றும் கலாச்சாரப் பெருமை உணர்வுடன் நிரம்பட்டும்” என்பது எனது ஒரே விருப்பம் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் திரு அமித் ஷா சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதற்கு திரு மோடி பதில் அளித்து பதிவிட்டுள்ளார்.
***
(Release ID: 2225672)
TV/IR/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2226513)
வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Telugu
,
Kannada
,
Malayalam