பிரதமர் அலுவலகம்
மலேசியாவில் உள்ள இந்திய சமுதாயத்தினருடன் பிரதமர் கலந்துரையாடினார்
இடுகை இடப்பட்ட நாள்:
08 FEB 2026 2:48PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08.02.2026) மலேசியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரகள் உட்பட இந்திய சமுதாயப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இதில் மலேநியூ டிஜிட்டல் துறை அமைச்சர் துவான் கோபிந்த் சிங் தியோ, மனிதவள அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், அந்நாட்டு பிரதமர் அலுவலக துணை அமைச்சர் துவான் எம். குலசேகரன், தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் துவான் ஆர். யுனேஸ்வரன் உள்ளிட்டோர் அடங்குவர்.
மலேசியாவின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும், இந்தியா-மலேசியா உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இந்திய சமுதாயத்தினரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை பிரதமர் எடுத்துரைத்தார். இரு நாடுகளுக்கும் இடையே விரிவான உத்திசார் ஒத்துழைப்பை உருவாக்குவதில் பிரதமரின் தலைமைக்கும், இந்தியா-மலேசியா உறவை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளுக்கும் அவர்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். பிரதமரின் தொலைநோக்குப் பார்வையையும், இந்தியாவை சிறப்பாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகளையும் அவர்கள் பாராட்டினர்.
மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்தின் நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கும் இந்திய வம்சாவளித் தலைவர்கள் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர், இதில் (i) மலேசியாவில் தூதரகத்தைத் திறக்க இந்தியா எடுத்த முடிவு; (ii) மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் மைய அறிவிப்பு; (iii) திருவள்ளுவர் உதவித்தொகை வழங்கும் நிறுவனம்; (iv) மலேசியாவில் வசிக்கும் ஆறாவது தலைமுறை இந்திய வம்சாவளி மக்களுக்கு ஓசிஐ அட்டை நீட்டிப்பு (v) 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பில், மலேசிய இந்திய மாணவர்களின் நலனுக்கான இந்திய உதவித்தொகை அறக்கட்டளை நிதியம் ஆகிய முடிவுகள் அடங்கும்.
இந்திய தேசிய ராணுவத்தின் பாலக் சேனாவின் மூத்த வீரர் டத்தோ ஜெயராஜ் ராஜா ராவ், நேதாஜி நல அறக்கட்டளையின் தலைவர் திரு ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் பிரதமர் சந்தித்தார். வலுவான, நவீன இந்தியாவை உருவாக்குவதற்கான நேதாஜியின் தொலைநோக்குப் பார்வைக்கு இந்திய அரசின் உறுதிப்பாட்டையும் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.
***
(Release ID: 2225106)
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2225206)
வருகையாளர் எண்ணிக்கை : 10