விவசாயத்துறை அமைச்சகம்
மத்தியப் பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தில் உள்ள அம்லேஹாவில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நாடு தழுவிய பருப்பு வகைப் புரட்சி தொடக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
07 FEB 2026 7:57PM by PIB Chennai
மத்திய பிரதேச மாநிலம் செகோர் மாவட்டத்தில் நாடு தழுவிய பருப்பு வகைகளின் புரட்சித் திட்டத்தை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது நடைபெற்ற தேசிய பருப்பு வகைகளில் ஆலோசனை கூட்டத்தில் சிவராஜ் சிங் சவுகான், வேளாண் துறை இணையமைச்சர், மத்திய பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ், ஒடிசா மாநில துணை முதலமைச்சர், வேளாண் அமைச்சர்கள் மற்றும் வேளாண்துறை சார்ந்த பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பருப்பு வகைகளில் தன்னிறைவு அடைவதற்கான செயல்திட்டம், வயல்களில் இருந்து இனி தொடங்குமே தவிர தில்லியின் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து அல்ல, என்பது இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட முக்கிய செய்தியாகும்.
இந்த நிகழ்ச்சியின் போது இந்தியாவில் பருப்பு வகைகளின் கொள்கை மற்றும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. முதலாவதாக பருப்பு வகைகளில் தன்னிறைவு பெறும் இயக்கத்தை நோக்கிய செயல்திட்டம் செகோரில் உள்ள உணவு பயறு வகைகள் ஆராய்ச்சி மையத்தில் இறுதிசெய்யப்பட்டது.
இரண்டாவதாக, பருப்பு வகைகளை இறக்குமதி செய்வது அவமானமான ஒரு செயல் என்றும் இனி அவற்றை இந்தியா ஏற்றுமதி செய்யும் என்றும், சமீப காலத்தில் நிறைவேற்றப்பட்ட சர்வதேச ஒப்பந்தங்களுக்கு இடையேயும் இந்திய விவசாயிகளின் நலனில் பாதிப்பு ஏற்பட ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் திரு சிவராஜ் சிங் சவுகான் திட்டவட்டமாக உறுதியளித்தார்.
***
(Release ID: 2224992)
TV/BR/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2225054)
வருகையாளர் எண்ணிக்கை : 9