சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வன உயிரினங்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பு முன்முயற்சிகள்

प्रविष्टि तिथि: 05 FEB 2026 3:33PM by PIB Chennai

வன உயிரின (பாதுகாப்பு) சட்டம், 1972, வன உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் கவனம் செலுத்துகிறது. இந்தச் சட்டம் வனவிலங்குகளை வேட்டையாடுவதை ஒழுங்குபடுத்துவதுடன், சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், பாதுகாப்பு இடங்கள் மற்றும் சமூக இருப்பிடங்களை அறிவிக்கவும், சட்டத்தின் விதிகளை மீறுவதற்கான அபராதங்களையும் விதிக்கிறது.

'வன உயிரின  வாழ்விட மேம்பாடு' மற்றும் 'புலிகள் மற்றும் யானைகள் பாதுகாப்புத் திட்டம்' போன்ற மத்திய நிதியுதவித் திட்டங்களின் கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அமைச்சகம் நிதி உதவி வழங்குகிறது. வனவிலங்குகளைப் பாதுகாப்பதும், அவற்றின் வாழ்விடங்களை மேம்படுத்துவதும் இது போன்ற திட்டங்களின் நோக்கமாகும்.

புலி, யானை, டால்பின் போன்ற முதன்மை இனங்களின் பாதுகாப்பு, புலிகள், யானைகள், சிங்கங்கள், பனிச்சிறுத்தைகள் மற்றும் டால்பின்களின் பிரத்யேகப்  பாதுகாப்புத் திட்டங்கள் போன்றவை இயக்க முறையில் செயல்படுத்தப்படுகின்றன. 'மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள உயிரினங்கள் மற்றும் வாழ்விடங்களைக் காப்பாற்றுவதற்கான மீட்புத் திட்டத்தின்' கீழ், அடையாளம் காணப்பட்ட 24 ஆபத்தான நிலையில் உள்ள உயிரினங்களின் மீது கவனம் செலுத்தும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு  உதவிகள் வழங்கப்படுகின்றன.

இந்தத் தகவலை, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் இன்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2223756&reg=3&lang=1

***

TV/BR/RK


(रिलीज़ आईडी: 2224345) आगंतुक पटल : 145
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Telugu