ரெயில்வே அமைச்சகம்
ஹோலி பண்டிகை இந்திய ரயில்வே அதிகளவில் சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
05 FEB 2026 8:11PM by PIB Chennai
ஹோலி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் இந்திய ரயில்வே சாதனை அளவாக 1,410-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 1,500 வரை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு ஹோலி பண்டிகையின் போது 1,144 சிறப்பு இரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
மண்டல வாரியாக, கிழக்கு மத்திய ரயில்வே அதிகபட்சமாக 285 சிறப்பு ரயில்களையும், மேற்கு ரயில்வே 231 மற்றும் மத்திய ரயில்வே 209 ரயில்களையும் இயக்க உள்ளன. தெற்கு ரயில்வே சார்பில் 39 ஹோலி சிறப்பு ரயில்கள் இயக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் இயக்கப்படவுள்ள இந்தச் சிறப்புச் சேவைகள் மூலம் முக்கிய நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து எளிதாக்கப்படும். பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்ய இரயில்வே நிர்வாகம் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2224063®=3&lang=1
***
TV/VK/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2224332)
வருகையாளர் எண்ணிக்கை : 6