சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிர் வனங்களில் 2020-ல் 674 ஆக இருந்த ஆசியவகை சிங்கங்களின் எண்ணிக்கை 2025-ல் 891 ஆக அதிகரித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 05 FEB 2026 3:32PM by PIB Chennai

நாட்டில் 2020-ல் 674 ஆக இருந்த ஆசிய வகை சிங்கங்களின் எண்ணிக்கை 2025-ல் 891 ஆக அதிகரித்துள்ளது. குஜராத் மாநிலத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, அறிவிக்கப்பட்ட வனப்பகுதிகள், நதி வழித்தடங்கள் மற்றும் வருவாய் தரிசு நிலங்கள் போன்ற புதிய பகுதிகளில் சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கால்நடை வசதிகளை வலுப்படுத்துவதன் மூலம் மனித-வனவிலங்கு மோதல்கள் மற்றும் நோய் பாதிப்புகளை நிர்வகிக்க மாநிலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

(i) சிங்கச் சூழலியல், இடஞ்சார்ந்த பரவல், வழித்தடப் பயன்பாடு, புறப்பகுதி சிங்கங்களின் நடமாட்டம், பருவகால முறைகள், நிலப் பயன்பாட்டு விருப்பத்தேர்வுகள் மற்றும் முக்கிய மேலாண்மை மண்டலங்கள் குறித்த அறிவியல் தரவுகளை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட ஒரு விரிவான செயற்கைக்கோள் வழியான தொலைதூர ஆய்வு.

(ii) வனவிலங்கு நண்பர்கள் மற்றும் தடம் அறிவோர் அப்பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டம் குறித்து அருகிலுள்ள மக்களுக்கு அறிவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

(iii) கிர் மற்றும் கிரேட்டர் கிர் சிங்க நிலப்பரப்பில் புல்வெளிகளை மேம்படுத்துதல், மீட்டமைத்தல், இரை தளத்தை அதிகரித்தல் மற்றும் வாழ்விட மேம்பாடு.

(iv) கிரேட்டர் கிர் நிலப்பரப்பில் அருகில் உள்ள பகுதிகளில் சிங்கங்களின் எண்ணிக்கையை நிர்வகித்தல் மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துதல்.

(v) இரவில் பயிர்களைப் பாதுகாக்க விவசாயிகளுக்கு உயர் தளங்கள் அமைத்தல்.

(vi) மனிதர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை நோக்கி விலங்குகள் செல்வதைக் குறைக்க நீர்வளங்களை அதிகரித்தல் போன்றவை அவற்றில் முக்கியமான நடவடிக்கைகள் ஆகும்.

இந்தத் தகவலை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை  இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் இன்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2223755&reg=3&lang=2

 

****

TV/SMB/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2224150) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Gujarati