சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எல்.எல்.பி பட்டப்படிப்பு அங்கீகாரம்-இந்திய பார் கவுன்சில் முடிவு

இடுகை இடப்பட்ட நாள்: 05 FEB 2026 1:00PM by PIB Chennai

1989-ம் ஆண்டு சட்டக் கல்வி விதிகளின் கீழ், தில்லி மற்றும் சில மாநிலங்களில் உள்ள நிறுவனங்கள் உட்பட சில பல்கலைக்கழகங்கள் மற்றும் சட்டக் கல்லூரிகள் வழங்கும் மாலை நேர எல்எல்பி படிப்புகளை, அப்போதைய நடைமுறையில் உள்ள தரநிலைகளுக்கு இணங்க, அனுமதித்து அங்கீகரித்ததாக இந்திய பார் கவுன்சில் (பி.சி.ஐ) தெரிவித்தது. இருப்பினும், 2000-2001 கல்வியாண்டிலிருந்து, சட்டக் கல்வி விதிகள், 1999 மூலம், சட்டக் கல்வியின் தரநிலைகள் மற்றும் சட்டத்தில் பட்டங்களை அங்கீகரித்தல் (விதிகள்)  கீழ்  அனைத்து மாநிலங்களிலும் மாலை நேர சட்டப் பட்டப்படிப்புகளை அங்கீகரிப்பதை நிறுத்தியது.

இந்திய பார் கவுன்சில் தனது சட்டக் கல்வி விதிகள், 2008-ன் கீழ் இந்த நிலைப்பாட்டை தொடர்ந்து பராமரித்து வருகிறது, இது எல்எல்பி  என்பது ஒரு வழக்கமான, முழுநேர தொழில்முறை பாடமாகும், இது பரிந்துரைக்கப்பட்ட தினசரி மற்றும் வாராந்தர வகுப்பறை நேரம், குறைந்தபட்ச வருகை மற்றும் காலை 8.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை நிலையான கல்வி கற்பித்தல் நேரத்தைக் கோருகிறது. அதன்படி, மாலை, இரவு-பள்ளி, பகுதிநேர, வார இறுதி, விடுமுறை, ஆன்லைன் அல்லது தொலைதூர எல்எல்பி  படிப்புகளுக்கு மாநில வாரியான அங்கீகாரம் 2000-2001 முதல் இல்லை என்ற நிலைப்பாட்டை இந்திய பார் கவுன்சில் சட்டப்பூர்வ விதிகள், சுற்றறிக்கைகள் மூலம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

1999-2000 கல்வியாண்டு வரை மாலை நேர வகுப்புகள் மூலம் சட்டப் பட்டம் முடித்த எல்எல்பி  பட்டம் பெற்றவர்கள் மேலே குறிப்பிட்டபடி, வழக்கறிஞராகப் பதிவு செய்ய உரிமை உண்டு.

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெ க்வால் இன்று மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலை தெரிவித்தார்.

(Release ID: 2223642)

****

TV/SMB/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2224047) வருகையாளர் எண்ணிக்கை : 23
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Telugu