புவி அறிவியல் அமைச்சகம்
வானிலை மாறுபாடுகளைக் கண்காணிக்கும் வகையில் நாடு முழுவதும் 47 டாப்ளர் வானிலை ரேடார் அமைப்புகள் செயல்பாட்டில் உள்ளன – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
இடுகை இடப்பட்ட நாள்:
05 FEB 2026 11:41AM by PIB Chennai
இந்தியாவில் வானிலையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து முன்னறிவிப்பு செய்யும் வகையில் நாடு முழுவதும் 47 டாப்ளர் வானிலை ரேடார் அமைப்புகள் செயல்பாட்டில் உள்ளதாக மத்திய புவிஅறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாட்டின் மொத்த பரப்பளவில் 87 சதவீதம் ரேடார் கண்காணிப்பு அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கூடுதலாக வானிலை முன்னறிவிப்பு தொடர்பான செயல்பாடுகளில் இந்தியாவை முன்னணி நாடாக உருவெடுக்கச் செய்யும் வகையில் வானிலை இயக்கம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த இயக்கம் வானிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கத்தில் செயல்பட உள்ளது.
தற்போது மொபைல் செயலி வாயிலான எச்சரிக்கை அமைப்பு செயல்பாட்டில் உள்ளது என்று அவர் கூறினார். வானிலை தொடர்பான முன்னறிவிப்புகள் மற்றுமட் எச்சரிச்கைகள் வானிலை அவசரகால செயல்பாட்டு மையங்களுடன் பகிரப்பட்டு பொது மக்களுக்கு தெரிவிக்கப்படுகின்றன.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2223576®=3&lang=1
----
TV/SV/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2223983)
வருகையாளர் எண்ணிக்கை : 7