குடியரசுத் தலைவர் செயலகம்
குரு ரவிதாசரின் பிறந்த தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
31 JAN 2026 4:58PM by PIB Chennai
குரு ரவிதாசரின் பிறந்த தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
“குரு ரவிதாஸ் ஜி-யின் புனிதமான பிறந்தநாளையொட்டி, இந்தியர்கள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குரு ரவிதாசர் ஒரு துறவியும் சமூக சீர்திருத்தவாதியுமாவார். அவர் தமது போதனைகள் மூலம் சமத்துவம், சமூக நீதி, அன்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினார். எளிமை, ஒழுக்கம் ஆகிய பாதைகளைப் பின்பற்றுவதன் மூலம், சாதி, மத அடிப்படையிலான பாகுபாட்டை ஒழிக்க அவர் அயராது உழைத்தார்.
குரு ரவிதாசரின் சிந்தனைகள் எல்லா காலங்களுக்கும் பொருத்தமானதாக உள்ளன. சிறந்த மனித விழுமியங்களைப் பின்பற்றுவதற்கு நம்மை அவை தொடர்ந்து வழிநடத்தும். அவரது போதனைகளை நம் வாழ்வில் பின்பற்றி, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் தீவிரமாகப் பங்களிப்பை வழங்குவோம்”.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221247®=3&lang=1
***
TV/PLM/RK
(रिलीज़ आईडी: 2221329)
आगंतुक पटल : 9