பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி சாவித்திரி தாக்கூர் தலைமையிலான இந்தியப் பிரதிநிதிகள் குழு, ஐ நா சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 64 - வது அமர்வில் பங்கேற்கிறது
प्रविष्टि तिथि:
31 JAN 2026 11:46AM by PIB Chennai
ஐ நா சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 64 - வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக,மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி சாவித்திரி தாக்கூர் தலைமையிலான இந்தியப் பிரதிநிதிகள் குழு நியூயார்க் செல்கிறது.
நியூயார்க் நகரில் உள்ள ஐ நா சபையின் தலைமையகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், ஐ நா பொருளாதார மற்றும் சமூக அமைப்பின் செயல்பாட்டுக் குழுவான சமூக மேம்பாட்டு ஆணையம், சமூக உள்ளடக்கம், சமத்துவம் மற்றும் நலன் சார்ந்த கொள்கைகள் உட்பட சமூக மேம்பாட்டுப் பிரச்சினைகள் குறித்த சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இந்த வருடாந்திர ஆலோசனைக் கூட்டம், உறுப்பு நாடுகளின் சமூக - பொருளாதார முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்கும், செயல்திறன் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ளவும் இது ஒரு சர்வதேச அளவிலான தளத்தை வழங்குகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்கும் இந்தியப் பிரதிநிதிகள் குழு, சமூக மேம்பாடு குறித்த பல்வேறு தரப்பினரின் முயற்சிகளில் அதன் தொடர்ச்சியான ஈடுபாட்டையும், உலகளவில், சமூகக் கொள்கை முன்னுரிமைகள் குறித்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த அதன் உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது. மேலும், இந்த சமூக மேம்பாடு தொடர்பான விஷயங்களில், ஐ நா சபையின் முகமைகள் மற்றும் பிற உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கான ஒரு வாய்ப்பையும் வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221146®=3&lang=1
***
TV/SV/RK
(रिलीज़ आईडी: 2221232)
आगंतुक पटल : 8