கலாசாரத்துறை அமைச்சகம்
குடியரசுதின அணிவகுப்பு: மத்திய கலாச்சார அமைச்சகத்தின் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு
இடுகை இடப்பட்ட நாள்:
30 JAN 2026 2:51PM by PIB Chennai
குடியரசுதின அணிவகுப்பில் மத்திய கலாச்சார அமைச்சகத்தின் சார்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. வந்தே மாதரம் – 150 ஆண்டு கால பயணம் என்ற தலைப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்தி சிறந்த அலங்கார ஊர்திக்கான முதல் பரிசும், இந்தியாவின் சிறப்புக் குறித்த கலை மற்றும் கருப்பொருளை சிறந்த முறையில் வெளிப்படுத்தியதற்காக சிறப்புப் பரிசும் வழங்கப்பட்டது.
முதல் பரிசு பெற்ற இந்த அலங்கார ஊர்தி வந்தே மாதரம் தேசிய பாடலின் 150 ஆண்டுகால பயணத்தை சிறப்பாக வடிவமைத்திருந்தது. இந்தப் பாடல் நாட்டின் சுதந்திரப் போராட்டம், ஒற்றுமை உணர்வு மற்றும் இந்திய நாகரீகத்தைக் காட்சிப்படுத்துவதாக அமைந்திருந்து.
வந்தே மாதரம் – இந்தியாவின் மாண்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்த கலாச்சார நடன நிகழ்ச்சிக்கு சிறப்புப் பரிச வழங்கப்பட்டது. பாட்டியாவில் உள்ள வடமண்டல கலாச்சார மையத்துடன் இணைந்து சங்கீத நாடக அகாடமியால் தொகுக்கப்பட்ட இந்த நடன நிகழ்ச்சி நாட்டின் சுதந்திர இயக்கத்தில் பங்காற்றிய பக்கிங் சந்திர சட்டோபாத்தியாவின் காலத்தால் அழியாத படைப்புகளை கௌரவிக்கும் வகையில் அமைந்திருந்த. இந்த நடன நிகழ்ச்சியில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 2,500 கலைஞர்கள் ஒன்றிணைந்து பாரம்பரிய நாட்டுப்புற பழங்குடியின கலைவடிவங்கள் மூலம் இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மையை வெளிப்படுத்துவதாக இருந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2220784®=3&lang=1
****
TV/SV/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2221004)
வருகையாளர் எண்ணிக்கை : 65