மக்களவை செயலகம்
லாலா லஜபதி ராய் பிறந்த தினத்தை முன்னிட்டு, மக்களவைத் தலைவர், அவருக்கு மலரஞ்சலி செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 JAN 2026 2:13PM by PIB Chennai
லாலா லஜபதி ராயின் பிறந்த தினத்தை முன்னிட்டு, நாடாளுமன்ற வளாகத்தில், மைய மண்டபத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு, மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, இன்று மலரஞ்சலி செலுத்தினார்.
மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சரும், மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சருமான திரு ஜகத் பிரகாஷ் நட்டா, மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இதர பிரமுகர்கள் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உள்ள லாலா லஜபதி ராயின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
மக்களவை பொதுச் செயலாளர் திரு உத்பல் குமார் சிங், மாநிலங்களவை பொதுச் செயலாளர் திரு பி.சி. மோடி ஆகியோரும் அன்னாருக்கு அஞ்சலி செலுத்தினர்.
மக்களவைச் செயலகத்தால் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடப்பட்ட லாலா லஜபதி ராயின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் சிற்றேடு ஒன்றும் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டது.
லாலா லஜபதி ராயின் உருவப்படம் அப்போதைய பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவால் 17 நவம்பர் 1956 அன்று நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் திறந்து வைக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2220759®=3&lang=1
***
TV/SV/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2220987)
வருகையாளர் எண்ணிக்கை : 78