மாநிலங்களவைச் செயலகம்
azadi ka amrit mahotsav

மாநிலங்களவை உறுப்பினர்கள் அவையிலும், குழுக்களிலும் நடைபெறும் விவாதங்களில் சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும் – குடியரசுத் துணைத்தலைவர்

प्रविष्टि तिथि: 29 JAN 2026 12:50PM by PIB Chennai

மாண்புமிகு உறுப்பினர்களே, நாடாளுமன்ற பட்ஜெட் அமர்வில் மாநிலங்களவையின் 270-வது அமர்வை நாம் தொடங்கும் நிலையில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். உலகில் இந்தியா விரைவாக வளர்ச்சியடையும் பெரிய பொருளாதார நாடாக இருப்பதையும், விரைவில் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாற இருப்பதையும்  காண்பது உண்மையில் மனதை ஈர்க்கிறது. இக்கூட்டத்தொடரின் தொடக்கத்தில் உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கும், நிலையும் நாட்டின் பொருளாதார சூழலை வடிவமைப்பதில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நமது பங்களிப்பை மிகவும் முக்கியமானதாக்கி உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்வோம்.

நமது நாட்டின் முன்னுரிமைகளுக்கான திடமான கொள்கையை வகுத்துள்ள நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கு குடியரசுத்தலைவர் ஆற்றிய உரையால் வழிநடத்தப்பட்டு இந்த அவையும் தமது முக்கிய சட்டமியற்றும் நடவடிக்கை மற்றும்  விவாதங்கள் மூலம் பங்களிப்பை வழங்கும். 30 அமர்வுகளில் 2026 – 27-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மற்றும் அரசின் சட்டமுன்மொழிவுகளை நாம் முழுமையாக ஆராய்வோம். மேலும் துறைசார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடைவெளியின் போது, அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மாநில கோரிக்கைகள் குறித்து முழுமையாக பரிசீலிக்கும். எனவே, மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் அவையிலும், குழுக்களிலும் நடைபெறும் விவாதங்களில் சிறந்த பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219983&reg=3&lang=1

**

TV/IR/RK/EA


(रिलीज़ आईडी: 2220337) आगंतुक पटल : 50
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Telugu