சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
செயல் மற்றும் பயன்பாட்டு முகமையின் கீழ், மும்பை மாநகராட்சிக்கு தேசிய பல்லுயிர் ஆணையம் 17 லட்சம் ரூபாய் நிதி விடுவிப்பு
प्रविष्टि तिथि:
29 JAN 2026 9:10AM by PIB Chennai
தேசிய பல்லுயிர் ஆணையம் உயிரியல் ஆதார வளங்களில் நீடித்த பயன்பாடு மற்றும் அதன் மூலம் ஏற்படும் நன்மைகளை நியாயமாகவும் சமமாகவும் பகிர்ந்து கொள்ளும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக செயல் மற்றும் பயன்பாட்டு முகமையின் கீழ், மும்பை மாநகராட்சிக்கு தேசிய பல்லுயிர் ஆணையம் 17 லட்சம் ரூபாய் நிதியை விடுவித்துள்ளது.
மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை வர்த்தக ரீதியிலான பயன்பாட்டிற்காக இந்த நிதி வழங்கப்படுகிறது. இது பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் நவீன உயிரித் தொழில்நுட்பத்திற்கு இடையேயான பயனுள்ள பிணைப்பை பிரதிபலிப்பதாக உள்ளது. உயிரி ஆதார வளங்களிலிருந்து பெறப்படும் வர்த்தக ஈவு தொகையின் ஒரு பகுதி உள்ளூர் சமூகங்களுக்கு அனுப்பப்படுவதை இது உறுதி செய்கிறது. இதன் மூலம் சமூகத்தில் வளர்ச்சி அடிப்படையிலான நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219875®=3&lang=1
**
TV/SV/KPG/EA
(रिलीज़ आईडी: 2220102)
आगंतुक पटल : 9