பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவரின் ஊக்கமளிக்கும் உரையுடன் இன்று தொடங்கியது: பிரதமர்

प्रविष्टि तिथि: 28 JAN 2026 3:17PM by PIB Chennai

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவரின் ஊக்கமளிக்கும் உரையுடன் இன்று தொடங்கியதாக பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். குடியரசுத்தலைவரின் உரை விரிவானதாகவும் நுண்ணறிவுமிக்கதாகவும் இருந்ததாக அவர் கூறினார். இது  அண்மை காலங்களில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் பயணத்தை பிரதிபலித்ததாகவும் எதிர்காலத்திற்கான தெளிவான திசையைக் காட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய உரை வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைப்பதன் முக்கியத்துவம் குறித்து சரியாக குறிப்பிட்டதாகவும், வலிமையான மற்றும் தற்சார்பு நாட்டை உருவாக்குவது நமது பகிரப்பட்ட விருப்பத்தை பிரதிபலித்ததாகவும் திரு மோடி கூறினார். சீர்திருத்தங்களை மேலும் விரைவுப்படுத்துவதற்கான நமது கூட்டு உறுதிப்பாட்டை இது உறுதி செய்ததாகவும் புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் சிறந்த நிர்வாகம் குறித்து எடுத்துரைத்ததாகவும் திரு மோடி மேலும் தெரிவித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவரின் ஊக்கமளிக்கும் உரையுடன் இன்று தொடங்கியது. நமது நாடாளுமன்ற பாரம்பரியங்களில் இந்த உரை சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்தது. இது கொள்கையின் போக்கையும் கூட்டு உறுதிப்பாட்டையும் விவரிப்பது வரும் மாதங்களில் நமது நாட்டின் வளர்ச்சிப் பயணத்திற்கு வழிகாட்டும்.

இன்றைய உரை விரிவாகவும் நுண்ணறிவுமிக்கதாகவும் இருந்தது. இது  அண்மை காலங்களில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் பயணத்தை பிரதிபலித்து,  எதிர்காலத்திற்கான தெளிவான திசையைக் காட்டியது. வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைப்பதன் முக்கியத்துவம் குறித்து சரியாக குறிப்பிட்டு, வலிமையான மற்றும் தற்சார்பு நாட்டை உருவாக்குவது குறித்து வலியுறுத்தியது.

இந்த உரையில் விவசாயிகள், இளைஞர்கள், ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களுக்கான நீடித்த முயற்சிகள் குறித்து விரிவான கருத்துகள் இடம் பெற்றிருந்தது. சீர்திருத்தங்களை மேலும் விரைவுப்படுத்துவதற்கான நமது கூட்டு உறுதிப்பாட்டை இது உறுதி செய்து, புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் சிறந்த நிர்வாகம் குறித்து எடுத்துரைத்தது.

***

TV/IR/KPG/SE


(रिलीज़ आईडी: 2219757) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam