தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலாளர்கள் பிராந்திய மாநாடு
प्रविष्टि तिथि:
27 JAN 2026 4:45PM by PIB Chennai
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறைச் செயலாளர்களுக்கான இரண்டு நாள் பிராந்திய மாநாட்டை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் திருமதி ஷோபா கரந்த்லாஜே ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், இன்று தொடங்கி வைத்தார்.
இம்மாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, டெல்லி ஆகிய யூனியன் பிரதேசங்களின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும்,தொழிலாளர் ஈட்டுறுதி கழகம் மற்றும் ஊழியர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் உள்ளிட்ட மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு அமைப்புகளின் மூத்த அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர். நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைச் சீராகச் செயல்படுத்துவது மற்றும் பிரதமரின் வளர்ச்சி அடைந்த பாரதம் வேலைவாய்ப்பு திட்டம் போன்ற திட்டங்கள் குறித்து ஆலோசிப்பதே இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திருமதி ஷோபா கரந்த்லாஜே, 29 மத்திய தொழிலாளர் சட்டங்களை நான்கு சட்டத் தொகுப்புகளாக மாற்றியது ஒரு வரலாற்றுச் சீர்திருத்தம் என்று குறிப்பிட்டார். இச்சட்டங்கள் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தி, தொழிலாளர் நலனை வலுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன என்றார். குறிப்பாக, பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்தல், வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதி மற்றும் முதல்முறையாக முறைசாரா மற்றும் 'கிக்' தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை விரிவுபடுத்துவது போன்ற அம்சங்களை அவர் சுட்டிக்காட்டினார். 'வளர்ச்சியடைந்த பாரதம் 2047' என்ற இலக்கை அடைய மத்திய-மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய ஆந்திரப் பிரதேச தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு வாசம்சட்டி சுபாஷ், இந்த புதிய சட்டத் தொகுப்புகள் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாட்சியைப் பிரதிபலிக்கின்றன என்றார். தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகள் குறித்த விழிப்புணர்வை அடித்தட்டு மக்கள் வரை கொண்டு செல்ல வேண்டியது அவசியம் என்றும், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகம் (இஎஸ்ஐசி) போன்ற அமைப்புகளின் மருத்துவச் சேவைகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219175®=3&lang=1
***
TV/VK/SE
(रिलीज़ आईडी: 2219347)
आगंतुक पटल : 8