PIB Headquarters
azadi ka amrit mahotsav

சர்வதேச தரவு தனியுரிமை தினம்

प्रविष्टि तिथि: 27 JAN 2026 2:14PM by PIB Chennai

சர்வதேச தரவு தனியுரிமை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

டிஜிட்டல் யுகத்தில் தனிப்பட்ட தரவு மற்றும் தனியுரிமையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் ஜனவரி 28 அன்று இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தரவு பாதுகாப்பு தினம் என்றும் அழைக்கப்படும் இந்த தினம், தரவு பாதுகாப்பு குறித்த உலகின் முதல் சட்டப்பூர்வ சர்வதேச ஒப்பந்தம் 108 - ல் கையெழுத்திட்டதை நினைவுகூரும் வகையில் 2006 - ம் ஆண்டு ஐரோப்பிய கவுன்சிலால் அறிவிக்கப்பட்டது.

தரவு தனியுரிமை என்பது பொறுப்புணர்வுடன் கூடிய டிஜிட்டல் நிர்வாகத்தின் அடித்தளமாகும். இது பெரிய அளவிலான டிஜிட்டல் பொது தளங்களில், மக்களின் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்கிறது. அரசின் டிஜிட்டல் சேவைகளில், நம்பிக்கையை வலுப்படுத்துதல், வலுவான தரவு தனியுரிமை கட்டமைப்புகள், டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பாதுகாப்பான, நெறிமுறை சார்ந்த பயன்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலம் அவற்றை திறம்படசெயல்படுத்த உதவுகின்றன.

தவறான பயன்பாட்டைத் தடுப்பது, சைபர் அச்சுறுத்தல்களைக் குறைப்பது, தரவு தொடர்பான மோசடிகளை அடையாளம் காண்பது போன்ற நடவடிக்கைகளுக்கும் இவை உதவுகின்றன.

டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்காக  2025–26 -ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், 782 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219070&reg=3&lang=1

***

 

TV/SV/KPG/SE


(रिलीज़ आईडी: 2219290) आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati