கலாசாரத்துறை அமைச்சகம்
25-வது பாரத் ரங் மஹோத்சவில் பிரேசில் நாடக தயாரிப்பான பசாடோ பிரசென்டே ஸென்டுரோ சர்வதேச அரங்கில் அறிமுகமாகிறது
प्रविष्टि तिथि:
27 JAN 2026 10:58AM by PIB Chennai
இரண்டு பெரிய உலகளாவிய நாடகத் திருவிழாவான இந்தியாவின் 25-வது பாரத் ரங் மஹோத்சவ் மற்றும் ரஷ்யாவின் 5-வது ஜிஐடிஐஎஸ் திருவிழா மூலம் பிரேசில் நாடக தயாரிப்பான பசாடோ பிரசென்டே ஸென்டுரோ 2026-ம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமாகிறது.
இந்தத் தயாரிப்பு உலக அளவில் பிரேசில் மாணவர் நாடகத்தின் கலை வலிமையை எடுத்துக் காட்டுகிறது. அத்துடன் பிரேசில் மற்றும் சர்வதேச நாடாக மரபுகளை ஒன்றிணைக்கிறது.
மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இந்திய தேசிய நாடகப்பள்ளி ஏற்பாடு செய்துள்ள உலகின் மிக முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச நாடகத் திருவிழாக்களில் ஒன்றான பாரத் வண்ணத்திருவிழாவில் 2026 பிப்ரவரி 5 அன்று பெங்களூருவிலும், பிப்ரவரி 7 அன்று புதுதில்லியிலும் இது பங்கேற்க உள்ளது. 2026 ஏப்ரல் மாதத்தில் மாஸ்கோவில் நடைபெறும் 5-வது ஜிஐடிஐஎஸ் திருவிழாவில் பசாடோ பிரசென்டே ஸென்டுரோ பிரேசில் சார்பில் பங்கேற்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2218968®=3&lang=1
**
TV/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2219124)
आगंतुक पटल : 8