பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2026 குடியரசு தின அணிவகுப்பில், ஸ்வமித்வா அலங்கார ஊர்தி அடித்தள நிலையிலான மக்களுக்கு அதிகாரமளித்தலை எடுத்துக்காட்டுகிறது; மைகவ் வாக்கெடுப்பு மூலம் தங்களுக்குப் பிடித்தமான அலங்கார ஊர்தியை மக்கள் தேர்ந்தெடுக்கலாம்

प्रविष्टि तिथि: 26 JAN 2026 6:50PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள கடமைப் பாதையில் இன்று நடைபெற்ற 77-வது குடியரசு தின அணிவகுப்பில், பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 450 பிரதிநிதிகள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். இது அடித்தள ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும் மக்களின் பங்கேற்பை உறுதி செய்வதற்கும் மத்திய அரசு அளிக்கும் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. கடமைப் பாதையில் அணிவகுத்த 30 அலங்கார ஊர்திகளில், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் "ஸ்வமித்வா திட்டம்: தற்சார்பு பஞ்சாயத்து மூலம் வளமான, தற்சார்பு இந்தியா" என்ற கருப்பொருளின் அலங்கார ஊர்தியும் இடம்பெற்றது. கிராமப்புற குடியிருப்புச் சொத்துக்களின் சட்டப்பூர்வ உரிமை, குடிமக்களுக்கு எவ்வாறு அதிகாரமளிக்கிறது, பஞ்சாயத்துக்களை வலுப்படுத்துகிறது என்பதை இது எடுத்துரைத்தது. இன்றுவரை, 1.84 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களில் ஏறத்தாழ மூன்று கோடி சொத்து அட்டைகளை வழங்க ஸ்வமித்வா திட்டம் உதவியுள்ளது. இது நிலத் தகராறுகளைக் குறைத்து, திட்டமிட்ட கிராமப்புற வளர்ச்சிக்கு ஆதரவளிக்கிறது.

தகவலறிந்த மக்கள் பங்கேற்புக்கான ஒரு முயற்சியாக, குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகளுக்கான மைகவ் பொது வாக்கெடுப்பில் பங்கேற்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் “ஸ்வமித்வா” திட்டத்தின் மீதான அணிவகுப்பு ஊர்திக்கு ஆதரவளிக்க, ஜனவரி 26, 2026 அன்று இரவு 11:45 மணி (இந்திய நேரம்) வரை மைகவ் தளத்தில் வாக்களிக்கலாம். பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து “MYGOVPOLL 365936,6” என குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமும் வாக்களிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2218847&reg=3&lang=1

***

TV/SMB/RK


(रिलीज़ आईडी: 2218902) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी