இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

58-வது வாரமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு நாடு முழுவதும் நடைபெற்றது - காரைக்காலில் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா பங்கேற்பு

प्रविष्टि तिथि: 25 JAN 2026 4:20PM by PIB Chennai

58-வது வாரமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று (25.01.2026) நடைபெற்றதுகாரைக்காலில் இதை மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தேசிய வாக்காளர் தினத்தையொட்டி சிறப்பு நிகழ்வாக இன்றைய 58-வது நிகழ்வு நடைபெற்றதுமுதல் முறை வாக்காளர்கள் உட்பட பலருடன் அமைச்சர் மிதிவண்டி ஓட்டிச் சென்றார்.

நிகழ்ச்சியில் பேசிய திரு மன்சுக் மண்டவியா, முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களைக் கொண்டாட பிரதமர் அழைப்பை விடுத்துள்ளதை சுட்டிக்காட்டினார். இன்று, 100-க்கும் மேற்பட்ட முதல் முறை வாக்காளர்களுடன் தாம் உரையாடியதாக அவர் தெரிவித்தார். உலகில் இளைஞர்கள் அதிகம் உள்ள ஜனநாயக நாடாக, இந்தியா உள்ளது எனவும் இளைஞர்களின் ஆற்றலைப் பயன்படுத்துவது அவசியம் என்றும் அவர் கூறினார்.

இதேபோல் அமிர்தசரஸில் உள்ள அட்டாரி எல்லையிலும் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு நடைபெற்றது. அங்கு குடியரசு தினம், தேசிய வாக்காளர் தினம் ஆகியவற்றை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வில் மத்திய ஆயுதக் காவல் படையினரும் இளம் வாக்காளர்களும் பங்கேற்றனர்.

மத்திய விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே தலைமையில் ஜலந்தரில் எல்லைப் பாதுகாப்புப் படை சார்பில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதில் முதல் முறை வாக்காளர்களை அமைச்சர் கௌரவித்தார். அதைத் தொடர்ந்து வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்வும் நடைபெற்றது.

ரூர்க்கி ஐஐடி-யில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மிதிவண்டி ஓட்டுதல் உடற்பயிற்சி நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.

புது தில்லியில், வசந்த் கஞ்சில் முதல் முறையாக வாக்காளர்கள் உட்பட பலர் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வில் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2218486&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2218608) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu , हिन्दी