உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜீவன் ரக்ஷா பதக்கங்களை 30 பேருக்கு வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்

प्रविष्टि तिथि: 25 JAN 2026 7:07PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, ஜீவன் ரக்ஷா பதகக தொடர் விருதுகள் - 2025- 30 பேருக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளார். இதில் சர்வோட்டம் ஜீவன் ரக்ஷா பதக்கம் 6 பேருக்கும், உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் 6 பேருக்கும், ஜீவன் ரக்ஷா பதக்கம் 18 பேருக்கும் வழங்கப்படுகிறது.

இதில் ஆறு பேருக்கு மரணத்திற்குப் பிந்தைய விருதாக இது வழங்கப்படுகிறது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.எஸ்.கௌரிசங்கர் ராஜாவிக்கு மரணத்திற்குப் பிந்தைய விருதாக சர்வோட்டம் ஜீவன் ரக்ஷா பதக்கம் வழங்கப்படுகிறது.

ஜீவன் ரக்ஷா பதக்கத் தொடரில் உள்ள இந்த மூன்று விருதுகள் ஒரு நபரின் உயிரைக் காப்பாற்றுவதில் சிறப்பான செயலுக்காக வழங்கப்படுகிறது. இந்த விருது சர்வோட்டம் ஜீவன் ரக்ஷா பதக்கம், உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம், ஜீவன் ரக்ஷா பதக்கம் என மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது. அனைத்து தரப்பு மக்களும் இந்த விருதுகளுக்கு தகுதியுடையவர்கள். இந்த விருது மரணத்திற்குப் பின்னரும் வழங்கப்படுகிறது.

இந்த விருதில் ஒரு பதக்கம், மத்திய உள்துறை அமைச்சரால் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ், பண உதவித்தொகை ஆகியவை அடங்கும்.

***

(Release ID: 2218542)

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2218585) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी , Gujarati