உள்துறை அமைச்சகம்
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு மத்திய அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து
प्रविष्टि तिथि:
25 JAN 2026 10:26AM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, 'தேசிய வாக்காளர் தினத்தை' முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"தேசிய வாக்காளர் தினத்தன்று நமது நாட்டு மக்கள் அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள். நமது அரசியல் சாசனம் ஒவ்வொரு வாக்காளருக்கும் சமமான அதிகாரத்தை வழங்கியுள்ளது. சரியான வாக்கு நமது தேசத்திற்கு சரியான திசையைக் காட்டும் என்பதை இந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது. நமது வாக்களிக்கும் முறையைப் பாதுகாப்பதும், எந்த வெளிப்புற காரணிகளும் அதை பாதிக்காமல் பார்த்துக் கொள்வதும் நமது தார்மீகப் பொறுப்பாகும். இந்த நாளில், வளர்ச்சியடைந்த, சக்திவாய்ந்த இந்தியாவை உருவாக்க நமது வாக்குகளின் சக்தியை ஒருங்கிணைந்து பயன்படுத்துவது என உறுதிமொழி ஏற்று நம்மை மீண்டும் அர்ப்பணித்துக் கொள்வோம்"
***
(Release ID: 2218376)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2218437)
आगंतुक पटल : 10