பிரதமர் அலுவலகம்
இமாச்சலப் பிரதேச மாநில தினத்தை முன்னிட்டு பிரதமர் அம்மாநில மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
25 JAN 2026 8:54AM by PIB Chennai
இமாச்சலப் பிரதேச மாநில தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு இன்று (25.01.2026) இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இமாச்சலப் பிரதேசம் இயற்கை, கலாச்சாரம் ஆகியவற்றின் தனித்துவமான சங்கமம் என்று பிரதமர் கூறியுள்ளார். இம்மாநில மக்களின் சிறந்த திறன், வீரம் ஆகியவற்றுக்காகப் பிரதமர் அவர்களைப் பாராட்டியுள்ளார். இம்மாநில மக்கள் எப்போதும் பாரதத் தாயின் சேவைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இமாச்சலப் பிரதேச மக்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கு பிரதமர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதோடு, இந்த தேவபூமி தொடர்ந்து செழிக்க பிரார்த்தனை செய்வதாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"இயற்கை, கலாச்சாரம் ஆகியவற்றின் சங்கமமான இமாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மாநில தினத்தன்று எனது வாழ்த்துகள். அவர்களின் அசாதாரண திறன், வீரம் ஆகியவற்றால், அவர்கள் எப்போதும் இந்தியத் தாய்க்கு சேவை செய்கின்றனர். இந்த புனித தேவ பூமியைச் சேர்ந்த மக்களின் பிரகாசமான எதிர்காலம், செழிப்பு ஆகியவற்றுக்காக நான் பிரார்த்திக்கிறேன்."
***
(Release ID: 2218364)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2218431)
आगंतुक पटल : 9