பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குடியரசு தினம் 2026: புதுதில்லியில் நடைபெற்ற தேசிய பள்ளி இசைக்குழுவின் இறுதிப் போட்டி

प्रविष्टि तिथि: 24 JAN 2026 6:33PM by PIB Chennai

77-வது குடியரசு தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய பள்ளி இசைக்குழுப் போட்டியின் இறுதிப் போட்டி, ஜனவரி 24 அன்று புதுதில்லியில் உள்ள தேசிய பால பவனில் நடைபெற்றது. ஒவ்வொரு மண்டலத்திலும் (கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு) இருந்து 18 அணிகள்  போட்டியிட்டன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு. சஞ்சய் சேத் பரிசுகளை வழங்கினார். முப்படைகளின்  உறுப்பினர்களை உள்ளடக்கிய பாதுகாப்பு அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட நடுவர் குழுவால் அவர்களின் நிகழ்ச்சிகள் மதிப்பிடப்பட்டன.

இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பின் போது, கோயம்புத்தூர், வெங்கடாபுரத்தில் உள்ள ஆவிலா கான்வென்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, கடமைப் பாதையில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை வழங்கவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய, பாதுகாப்புத் துறை இணையமைச்சர் வெற்றியாளர்களை அவர்களின் நிகழ்ச்சிகளுக்காகப் பாராட்டினார். மேலும், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த  பாரதமாக மாறுவதற்கான தேசத்தின் பயணத்தில் நாட்டின் இளைஞர்களே முக்கிய உந்துசக்திகள் என்று அவர் விவரித்தார். இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்றும் கடைப்பிடிக்கப்படும் தேசிய பெண் குழந்தை தினத்துடன் ஒத்துப்போவதால், பாதுகாப்புத் துறை இணையமைச்சர் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது பெண் பணியாளர்களின் பங்கை வெகுவாகப் பாராட்டினார். மேலும், நாட்டின் பெண்கள் சக்தி, பிரதமர் திரு. நரேந்திர மோடியின்  தொலைநோக்குப் பார்வையை நனவாக்கி வருகிறது என்று கூறினார்.

இப்போட்டி பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கல்வி அமைச்சகம் ஆகியவற்றால் கூட்டாக நடத்தப்பட்டது. முதல் நிலை போட்டி, சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, கேவிஎஸ், என்விஎஸ், கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவாசிய வித்யாலயா, பிஎம்-ஸ்ரீ மற்றும் சைனிக் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் நடத்தப்பட்டது.

ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் வெற்றி பெற்ற நான்கு இசைக்குழுக்கள் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்றன. மாநில அளவில் 763 பள்ளி இசைக்குழுக்கள் பங்கேற்றன, அவற்றில் 94 பள்ளி இசைக்குழுக்கள் மண்டல அளவிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. மண்டல அளவிலான போட்டியில், 30 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 80 பள்ளி இசைக்குழுக்களிலிருந்து 2,217 குழந்தைகள் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2218229&reg=3&lang=1

***

TV/PKV/RJ


(रिलीज़ आईडी: 2218293) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी , Marathi