இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் 'மை பாரத்' அமைப்பு நடைப்பயணம்

प्रविष्टि तिथि: 24 JAN 2026 4:13PM by PIB Chennai

2026-ம் ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தைக் குறிக்கும் வகையில், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி அமைப்பான மேரா யுவ பாரத் (MY Bharat), 2026 ஜனவரி 25 அன்று நாடு தழுவிய தேசிய வாக்காளர் தின நடைப்பயணம் / ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் பயணத்தை ஏற்பாடு செய்கிறது. அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைநகரங்கள் மற்றும் மாவட்டத் தலைமையகங்களில் இதற்கான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்தியத் தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் தேசிய வாக்காளர் தினம், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்கள் மீது கவனம் செலுத்தி, தகவலறிந்த, நெறிமுறைக்குட்பட்ட மற்றும் பங்கேற்புடனான தேர்தல் ஈடுபாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேச நிர்மாணத்தில் மக்கள் பங்கேற்பு குறித்த  பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, இந்த முயற்சி இளம் குடிமக்களை இந்தியாவின் ஜனநாயகச் செயல்பாட்டின் மையத்தில் நிலைநிறுத்த முயல்கிறது.

இந்தத் திட்டம் வாக்காளர் விழிப்புணர்வை உடல் தகுதி மற்றும் சமூகப் பங்கேற்புடன் இணைக்கும். மேலும் சாத்தியமான இடங்களில் கேலோ இந்தியா / இந்திய விளையாட்டு ஆணையத்தின் 'ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிள் பயணம்' முன்முயற்சியையும் ஒருங்கிணைக்கும். நடைப்பயணங்கள் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் நடவடிக்கைகள் மூலம், மை பாரத் தன்னார்வலர்கள் சமூகத்தினருடன் இணைந்து, வாக்காளர் பதிவு மற்றும் தகவலறிந்த பங்கேற்பை ஊக்குவிப்பார்கள். மேலும் ஜனநாயக விழுமியங்களை உள்ளடக்கிய மற்றும் பங்கேற்பு முறையில் மேம்படுத்துவார்கள்.

36 மாநில/யூனியன் பிரதேசத் தலைநகரங்களில், சுமார் 1,000 மை பாரத் தன்னார்வலர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில், அரசியலமைப்பு அதிகாரிகளால் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்படும் விழாக்கள், முதல் முறை வாக்காளர்களைப் பாராட்டுதல், வாக்காளர் விழிப்புணர்வு கலந்துரையாடல்கள், உறுதிமொழி எடுத்தல் ஆகியவை நடைபெறும்இதேபோன்ற நடவடிக்கைகள் 763 மாவட்டங்களிலும் ஏற்பாடு செய்யப்படும். இதில் மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், உள்ளூர் நிர்வாகம், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் ஒரு மாவட்டத்திற்கு சுமார் 500 தன்னார்வலர்கள் பொருத்தமான உள்ளூர் மாற்றங்களுடன் பங்கேற்பார்கள்.

இந்த நாடு தழுவிய பரப்புரையின் மூலம், மை பாரத் அமைப்பு இளைஞர்களிடையே ஜனநாயக உணர்வை வலுப்படுத்தவும், நாடு முழுவதும் 2026-ம் ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தை அதிக கவன ஈர்ப்புடனும், சீரான முறையிலும் அனுசரிப்பதை உறுதி செய்யவும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சி குறித்து ஊடகங்களுக்குத் தெரிவிப்பதற்காக மாவட்ட அளவில் செய்தியாளர் சந்திப்புகளும் ஏற்பாடு செய்யப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2218138&reg=3&lang=1

***

TV/PKV/RJ


(रिलीज़ आईडी: 2218268) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Malayalam , English , Urdu , हिन्दी , Gujarati , Kannada